மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 31-2026

 

மேஷ ராசி அன்பர்களே! விரும்பிய காரியங்கள் நடக்கும் நாள். எந்த விஷயத்திலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சிறப்பாக இருக்கும். மற்றவர்களால் மறைமுக தொல்லைகளும் விமர்சனங்களும் ஏற்படலாம். குடும்பத்தில் சிறிது குழப்பம் ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் சிக்கல் எதுவும் இருக்காது. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகள் குறையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருமானம் அதிகரிக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறைகள் தீரும். இன்று உங்கள் பலம்: நண்பர்கள் உங்கள் தொழிலுக்கு உதவலாம். குடும்பத்தினர் பாசத்தோடு இருப்பார்கள். எதிலும் நிதானமாக முடிவு எடுப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் வரலாம். பணவரவில் தடை உண்டாகலாம். வெளியூர் பயணங்களில் சிக்கல் ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 முடிக்க வேண்டிய செயல்களை ஒத்தி போடாதீர்கள். 2 எந்த வேலையாக இருந்தாலும் விறுவிறுப்பாக செய்து முடிக்க பாருங்கள். 3 குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி மகிழுங்கள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே! சற்று தாமதமாக பலன்கள் வந்து சேரும் நாள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராக இருக்கும். மனைவி குழந்தைகள் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதலான கவனம் தேவை. குடும்பத்தில் சிக்கல் ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் கவலைப்பட தேவையில்லை. மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் தொழிலுக்கு ஏற்படக்கூடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வம் அதிகரிக்கும். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்குக் கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி உண்டாகும். இன்று உங்கள் பலம்: புதிய தொழில்நுட்பத்தோடு வேலையில் இறங்குவீர்கள். வெளியில் இருந்து உதவிகள் வரலாம். குடும்பத்தினர் பாசத்தோடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்களால் தொந்தரவுகள் வரலாம். பண வரவு குறையலாம். வெளியூர் பயணங்கள் சிரமத்தை தரலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும். 2 வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது. 3 வங்கி வரவு செலவுகளில் கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! வெற்றிகரமான நன்மைகள் வந்து சேரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகள் சம்பந்தமான முடிவு எடுப்பதில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். கையில் தாராளமாக பணம் புழங்கும். குடும்பம் குதூகலமாக நடக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்புகள் வந்து சேரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமைகள் கிடைக்கும் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெருகும். இன்று உங்கள் பலம்: வியாபாரத்தில் புதிய நுட்பங்களை தொகுத்துவீர்கள். கையிருப்பை அதிகப்படுத்துவீர்கள். பெரியோர்களின் ஆதரவு உறுதுணையாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: உறவுகளில் சிறுசிறு சிக்கல்கள் வரலாம். வேலை இடத்தில் தடுமாற்றமான சூழ்நிலைக் ஆளாவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும். 2 வரவு செலவு கணக்கு நிதானம் தேவை. 3 அவசரப்பட்டு யாருக்கும் உத்தரவாதம் தர வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்

கடக ராசி அன்பர்களே! வேண்டியதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் கொள்ளை லாபம் கிடைக்கும். உறவினர்களின் உதவவியால் ஒரு பெரிய காரியத்தை முடிப்பீர்கள். சேமலாபகங்கள் அதிகரிக்கும். தெற்கு திசையில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் வெளியூர் நண்பர் உங்களுக்கு சாதகமான தகவலை தருவார். வேலை இடத்தில் எதிர்பார்த்த நன்மை நடக்கும் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்தவர்கள் பெருமை அடைவார்கள் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசு உதவி பெறுவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோரின் ஆசி கிடைக்கும். இன்று உங்கள் பலம்: வெற்றி பெறுவதற்கான அத்தனை திட்டங்களையும் போடுவீர்கள். வேலையை முடிக்க வேண்டும் என்ற மனப்போக்கு இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத அளவுக்கு வீட்டில் சிக்கல் உண்டாகும். பிள்ளைகளாலும் மன நிம்மதி குறையும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக ஓட்ட வேண்டும். 2 வேலை இடத்தில் அடுத்த ஒரு விஷயத்தில் தலையிட வேண்டாம். 3 அறிவுரை சொல்லும் நபரிடம் அதிகம் பேசாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! வராது என்று நினைத்த பணம் கிடைத்து துணிவை கொடுக்கும். வியாபாரத்தில் உங்கள் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை கொண்டு வரும் தொழிலில் போட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும் உங்களுக்கு தெய்வ அனுக்கிரகம் எப்போதும் உண்டு. முன்னோர்கள் நல்லாசியோடு உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பாராத இடத்திலிருந்து கூட உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்லவரை சந்திப்பார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்புகள் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மைகள் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: வியாபார பெருக்கத்திற்காக திட்டம் தீட்டி வெற்றி பெறுவது. உறவுகளும் நட்புகளும் உங்களுக்கு உதவுவது. இன்று உங்கள் பலவீனம்: உங்களை அறியாமலேயே சில நேரம் மனக்கவலை ஏற்படும். குடும்பத்தில் உங்கள் செயல் தவறாக புரிந்து கொள்ளப்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொழில் போட்டியாளர்களுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 உறவினர்களிடம் மனம் புண்படாமல் நடக்க வேண்டும். 3 மின்சார சாதனங்களை கவனமாக கையாள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான பலன் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் அதிகமான உழைப்பை போட வேண்டும். தொழிலுக்கு ஏற்படும் மறைமுக எதிர்ப்புகளை களைய வேண்டும். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் கவனக்குறைவு வேண்டாம். எதையும் சீர்தூக்கிப் பார்த்து செய்ய வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அவசரப்பட்டு கடன் வாங்க வேண்டாம். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். குலதெய்வ அருளால் நல்லது நடக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழில் நுட்பத்தோடு வியாபாரத்தை நடத்துவது. எதிர்ப்புகளை முறியடிக்கும் மன தைரியம். இன்று உங்கள் பலவீனம்: குடும்ப சூழ்நிலையால் தடுமாற்றம் அடைவது. வேலை இடத்தில் சலசலப்பு ஏற்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 2 இடம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கவனக்குறைவு கூடாது. 3 பணம் கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

துலாம் ராசி அன்பர்களே! விருப்பப்பட்ட காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் திருப்தியான சூழல்கள் உருவாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணி புரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு வியாபாரத்திற்கு உதவி செய்யும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கும் நிலை உண்டாகும். வாகன யோகம் சித்திக்கும். தன தானிய லாபம் அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மைகள் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும் . இன்று உங்கள் பலம்: புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் ஏதேனும் தாய் வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: கடன் சம்பந்தப்பட்ட விஷயம் மனதை சங்கடப்படுத்தும். ஆரோக்கியத்தில் ஒரு விதமான சோர்வு ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணிபுரியும் இடத்தில் கவனச் சிதறல் ஆகாது. 2 மற்றொரு விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். 3 சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.

விருச்சிக ராசி அன்பர்களே! வெற்றிகள் தேடி வரும் நாள். செல்வ பெருக்கு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தொழிலில் புதிய பாதைகள் தெரியும். வியாபாரத்திற்கு நண்பர்களின் உதவி பக்கபலமாக அமையும். வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டிலிருந்து நண்பரின் உதவி தேடி வரும். பண வரவு தாராளமாக இருக்கும். வங்கி இருப்பு உயரும். தேவையில்லாத செலவுகள் குறையும். வேலை இடத்தில் சிறப்புகள் சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைகள் சிறப்பாக நடக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் வேலை மதிப்பு உயரும். இன்று உங்கள் பலம்: உடன் பிறந்த வருடம் ஏற்பட்ட பிணக்கு முடிவுக்கு வரும். வராமல் இருந்த ஒரு தொகை கைக்கு வந்து சேரும். இன்று உங்கள் பலவீனம்: உத்தியோகிடத்தில் விட்டுக் கொடுத்து போக மாட்டீர்கள். அரசு பணிகள் அவசரமாக நிறைவேற வேண்டும் என்று நினைப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 புதிய தொழில் ஆரம்பிப்பதில் பொறுமை மிக முக்கியம். 2 முக்கிய பிரமுகர்களின் மனம் கோணாமல் நடக்க வேண்டும். 3 சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்துகின்ற திறமை வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! மனநிம்மதி அதிகரிக்கும் நாள். வெளிநாட்டு பயணத்திற்கான ஏற்பாடுகள் தொடரும். புதிய வேலையில் முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அரசு வேலையில் பதவி உயர்வு உண்டாகும். யோக பலன்கள் தானாக வந்து சேரும். வியாபார வெற்றியின் மூலம் தன லாபம் பெருகும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். புனித யாத்திரை செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் தொழில் மேன்மை அடையும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் எண்ணியது நிறைவேறும். இன்று உங்கள் பலம்: மனதளவில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். புதிய வேலை முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: சட்டென கோபப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசுவது. சிறு பிரச்சினையாக இருந்தாலும் பெரிதாக எண்ணி கவலைப்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இரவு நேர பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். 2 ஆடம்பரமாக செலவு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். 3 மனம் போன போக்கில் நடக்கக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி அன்பர்களே! விரும்பிய சம்பவங்கள் நடக்கும் நாள் இன்று. வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உதவி செய்கின்ற மனநிலை உங்களுக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைத்து பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூரிலிருந்து தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வெற்றியடைவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் நினைத்ததை முடிப்பார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வாகனம் வாங்குவார்கள். இன்று உங்கள் பலம்: துறுதுறுப்பாக இருக்கின்ற உங்கள் வேலை திறன் தொழிலை மேம்படுத்தும். தீர்க்கதரிசனமாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: இல்லை என்று சொல்லாமல் கையில் இருக்கின்ற காசை கேட்போரிடம் கொடுப்பீர்கள். யார் சொல்வதை எளிதாக நம்புவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 நாளை பார்த்துக் கொள்வோம் என்று வேலையை தள்ளிப் போடக்கூடாது. 2 வேலை இடத்தில் மேலதிகாரி பற்றி மற்றவரிடம் பேசக்கூடாது. 3 பிள்ளைகள் விஷயத்தில் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்

கும்ப ராசி அன்பர்களே! இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடிவரும். குடும்பத்தில் மங்கல முயற்சிகள் வெற்றி பெறும். தர்ம காரியங்கள் நடக்கும். மகான்களின் ஆதரவு கிட்டும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். அலைந்து திரிய வேண்டிய வேலையில் நல்ல லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக பல காரியங்களை சாதிப்பீர்கள். தனதானிய லாபம் கிட்டும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் சேரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். இன்று உங்கள் பலம்: அரசாங்க காரியங்களுக்கு நல்ல நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரம் வெற்றிக்காக திட்டம் தீட்டுவது. இன்று உங்கள் பலவீனம்: ஏதாவது ஒரு சிந்தனை ஏற்பட்டு உங்கள் மனதில் அழுத்தத்தை கொண்டு வருவது. கட்டுப்படுத்தினாலும் செலவுகள் கை மீறி போவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும். 2 வாகனம் ஓட்டும்போதும் சாலையை கடக்கும் போதும் கவனம் சேரக்கூடாது. 3 இணைய மோசடிகளில் விலகி இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! தேடிய நன்மைகள் வீடு வருகின்ற நாள் இது. வியாபாரத்தில் மிகப்பெரிய லாபமடைவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கிழக்கு திசை பயணத்தால் ஒரு பெரிய நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நினைத்துப் பார்க்காத லாபம் கிட்டும். தொழில்துறையில் எதிர்ப்புகள் விலகும். உங்களைக் கெடுக்க நினைத்தவர்கள் கெட்டுப் போவது நிச்சயம். பெண்களால் ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் சித்திக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பண வரவு பெறுவார்கள். ரேவதி நட்சத்திரக்காரர்கள் மேன்மை அடைவார். இன்று உங்கள் பலம்: சாமர்த்தியமான பேச்சால் மற்றவருடைய மனதில் இடம் பிடித்து விடுவீர்கள். வேலை இடத்து குறைகளை நுணுக்கமாகக் கண்டுபிடிப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: எந்த காரியத்திலும் சடாரென கோபப்பட்டு விடுவீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை பேசி விடுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 உரிமை இல்லாத இடத்தில் உறவு நெருக்கம் வேண்டாம். 2 நிலம் வாங்கும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 3 நீண்ட தூர பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 14 – ஐப்பசி – பராபவ வருடம் சனி நாள் சனி திதி சஷ்டி (up to 4:57 pm) சப்தமி (up to November 01, 2:52 pm) நட்சத்திரம் திருவாதிரை (up to 7:12 am) புனர்பூசம் (up to November 01,5:39 am) பூசம் (up to November 02,4:30 am) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 7:45 – 8:45 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11:45 am / 9:30 – 10:30 pm இராகு காலம் காலை 9.00 – 10.30 எமகண்டம் மதியம் 1.30 – 3.00 குளிகை காலை 6.00 – 7.30 சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் சந்திராஷ்டமம் கேட்டை, மூலம் சூரியோதயம் 6:06 AM சூரிய அஸ்தமனம் 5:38 PM சந்திரோதயம் Oct 31 10:48 PM சந்திர அஸ்தமனம் Nov 01 12:04 PM