மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உங்களுக்கு அரசாங்க சன்மானங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல வருமானம் உண்டாகும். பதவி உயர்வு சம்பள உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் மள மளவென்று லாபம் அதிகரிக்கும். குலதெய்வத்தினுடைய அனுக்கிரகம் உங்களுக்கு உண்டு. மேற்கு திசையில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து மகிழ்வை கொடுக்கும். எதையும் நேர்மையாக செய்ய வேண்டும் என்று மனம் உறுதிப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர்வு உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமை அடைவார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: மிக சாமர்த்தியமாக திட்டம் போட்டு எந்த செயலிலும் இறங்குவீர்கள்.
ஆன்மீகப் பெரியவரின் ஆசி உங்களுக்கு துணையாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: உடனே காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அதற்காக யார் உதவியை வேண்டுமானாலும் தேடுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனங்களில் செல்லும்போது தொலைபேசி கூடாது. 2 அந்நிய பெண்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். 3 பிள்ளைகளை கோபமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! ஆசைகள் எல்லாம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். பற்பல வகையில் நன்மைகள் சேரும். தனதானிய சேர்க்கை ஏற்படும். தொழிலில் மேன்மை உண்டாகும். மற்றவர்கள் பொறாமைப்படும் நிலை ஏற்படும். கையிருப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெரிய சிறப்பு ஏற்படும். மன அமைதி உண்டாகும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை உயர்வு பெறுவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவியில் பெருமை அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொட்டது வெற்றியாகும்.
இன்று உங்கள் பலம்: எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக முனைப்போடு செயல்படுவீர்கள். புத்திசாலித்தனமான நண்பரின் உதவி உண்டு. இன்று உங்கள் பலவீனம்: அவசரமான நேரத்தில் உடல்நிலை சிரமப்படுத்தும். அரசாங்கத்தில் இருந்து வரவேண்டிய உதவி தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வருகின்ற வருமானத்தை சேமிக்க வேண்டும். 2 வியாபாரத்தில் என்ன குறைகள் என்பதை கவனமாக பார்க்க வேண்டும். 3 ஆசையாக பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! தாமதமானாலும் காரிய வெற்றி பெருகின்ற நாள். பற்பல வகையிலும் நன்மைகள் உண்டாகும். நீங்கள் விருப்பப்பட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும். அறிவு திறமையால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். தர்ம காரியங்கள் நிகழும். மகான்களின் வாழ்த்துக்கிட்டும். தென்மேற்கு திசையில் இருந்து சிறப்பான செய்தி வந்து சேரும். குருவருள் சித்திக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் பெறுவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: சாதிக்க முடியும் என்ற எண்ணத்தோடு காரியத்தில் இறங்குவீர்கள். கடந்த கால சேமிப்பு இப்போது கை கொடுக்கும். இன்று உங்கள் பலவீனம்: கண் திருஷ்டி உங்களுக்கு சில இடையூறுகளை கொண்டு வரும். உறவினர்களின் தொந்தரவும் பாதிக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேலை இடத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது. 2 வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கி வர மறக்க வேண்டாம். 3 வரவு செலவு கணக்குகளில் சோம்பேறித்தனம் கூடாது. அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலுக்கு எதிராக இருந்த பகைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும். அந்நியர்களின் உதவி கிட்டும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உடலை வருத்திய துன்பங்கள் நீங்கும். நன்மைகளும் லாபங்களும் பெருகி கையிருப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளும் ஏற்படும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்ததை சாதிப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வியாபாரத்தை விரிவாக்க புதிய திட்டங்கள் போடுவீர்கள்.
அதற்கான பண பலத்திற்கு வழி வகுப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: இரவு நேரத்தில் தாமதமாக வீட்டுக்கு திரும்பி வருவது. நண்பர்களின் பேச்சை தட்ட முடியாமல் சில காரியங்கள் செய்வது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 உறவினர் வீட்டு பிரச்சனையில் ஒதுங்கி இருக்க வேண்டும். 2 பணம் கொடுத்து வாங்குவதில் அலட்சியம் கூடாது. 3 தேக ஆரோக்கியத்தில் சற்று அக்கறைப்பட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! கேட்ட இடத்தில் உதவி வந்து சேரும் நாள். பெண்களால் நன்மை உண்டாகும். வெளியூர் பிரயாணங்களில் மூலம் வருமானம் அதிகரிக்கும். சிறிய வியாபாரத்தில் கூட நிறைவான லாபம் கிடைக்கும். வேலை இடங்களில் உங்களுடைய மதிப்பு உயரும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. உற்றார் உறவினர்கள் பகை விலகும். கடன் சுமை குறையும். வீண் செலவுகளில் இருந்து விடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மைகள் அடைவார்கள்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்புகள் பெறுவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: எதிர்பாராத பண வரவு வந்து உங்களின் தேவைக்கு பயன்படும். நீங்கள் விருப்பப்பட்ட நபரை சந்திப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: வீட்டு பிரச்சினைகள் உறுதியான மனநிலையை பாதிக்கும். நம்பிய ஒரு காரியம் தள்ளிப் போகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வெளியூர் பயணத்தின் போது பணம் பொருட்களை பத்திரமாக வைக்க வேண்டும். 2 மேல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக கூடாது. 3 வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! மிதமான யோக பலன் நடக்கும் நாள். வீண் செலவுகள் வந்து சேரலாம். அதற்கான வருமானமும் உங்களுக்கு கிடைக்கும். போட்டியாளர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுடைய பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ணும் கருத்துமாக நடக்க வேண்டும். பெண்கள் விஷயத்திலும் நிதானம் தேவை. வேலை அலைச்சல் காரணமாக உறக்கம் கெடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனம் உற்சாகப்படுவார்கள்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வருமானம் குறையும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணச் செலவு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: எதிர்ப்புகளை முறியடிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. வெளியூரில் இருந்து வரவேண்டிய உதவிகள் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு கெட்ட பெயரை ஒருவர் ஏற்படுத்துவார். வாகனத்தில் பிரச்சனை உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எளிதில் யாரையும் நம்ப வேண்டாம். 2 பெற்றோர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். 3 மனைவியின் ஆசையை மறக்காமல் பூர்த்தி செய்ய வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! எதிர்பாராத லாபம் கிடைக்கும் நாள். வீரதீர செயல்களில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். கேளிக்கையான விஷயங்களில் மனம் நாட்டம் கொள்ளும். பெயரும் புகழும் வந்து சேரும். அரசாங்க அதிகாரிகளால் பரிசு கிடைக்கும். மற்றவரிடம் அபிமானம் அதிகரிக்கும். மன நிம்மதி கூடும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு காரியம் வெற்றியாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும்.
விசாகம் நட்சத்திரக்காரர்கள் பெருமை அடைவார்கள். இன்று உங்கள் பலம்: முள்ளை முள்ளால் எடுக்கின்ற புத்தி உங்களுக்கு உண்டு. காரியத்தை முடிக்க கடுமையாக பாடுபடும் உங்கள் மன உறுதி. இன்று உங்கள் பலவீனம்: போட்டியாளர்களால் தொழிலுக்கு ஏற்படும் இடையூறு. எதிர்பார்த்த சில காரியங்கள் தள்ளிப் போவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 நேரம் தவறாமல் காரியம் செய்ய பழக வேண்டும். 2 வரவு செலவு கணக்கை சரியாக வைத்திருக்க வேண்டும். 3 அடுத்தவருக்கு ஜாமீன் போடுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! இன்று முக்கியமான சம்பவங்கள் நடக்கும் நாள். குடும்பத்தில் சுகபோகம் அதிகரிக்கும். தொழிலில் வருகின்ற வருமானத்தால் வங்கி இருப்பு உயரும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வியாபாரத்தை அதிகரிக்க செய்வீர்கள். போட்டிகளும் பொறாமைகளும் விலகும். நோய் தொல்லைகள் நீங்கும். கிழக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பயிர்த்தொழில் மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.
தன லாபங்கள் அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நிறைவேறும். இன்று உங்கள் பலம்: உடல் சோர்வு இருந்தாலும் மன சோர்வு அடைய மாட்டீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பை பேணுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: வீட்டில் நடக்கும் குழப்பங்கள் மன அமைதியை கெடுக்கும். தொழிலில் கவனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பெரிய தொகைகளை வங்கிக்கு அலட்சியமாக எடுத்துச் செல்லக் கூடாது. 2 அதிக லாபம் கிடைக்கும் என்று அகலக்கால் வைக்க கூடாது. 3 போனில் வரும் ஆசை வார்த்தைகளை கவனத்தில் எடுக்கக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! இன்று உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். செல்வந்தர் தொடர்பால் உங்கள் பண தேவை பூர்த்தியாகும். வேலை செய்கின்ற இடத்தில் திறமை வெளிப்படும். பதவி உயர்வு பண வரவு அதிகரிக்கும். கோயில் விசேஷங்களில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிட்டும். அறப்பணிகளில் ஈடுபடுகின்ற வாய்ப்பு ஏற்படும். குடும்ப சௌரியங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். சாஸ்திர புராணங்களின் மீது நாட்டம் வரும். . மூல நட்சத்திரக்காரர்களுக்கு தன லாபம் சற்று குறையும்.
பூராட நட்சத்திரக்காரர்கள் கடன்கள் வசூலாகும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தேவைகள் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: தொழிலில் ஏற்படும் தடைகளை தாண்டி செல்வீர்கள். எதிர்பாராத செலவுகளுக்கும் கையிருப்பை பயன்படுத்துவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: மனைவியின் ஒத்துழைப்பு இல்லாததால் மன வருத்தம் அடைவீர்கள். கேட்ட இடத்திலும் பணம் வர தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 சுய தம்பட்டம் அடிப்பதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். 2 சாப்பாட்டு விஷயத்தில் நேரம் தவறக்கூடாது. 3 நண்பர்கள் வீட்டு விசயத்தில் அதிகம் தலையிட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! கொஞ்சம் சிரமப்பட்டு நல்ல பலன் கிடைக்கும் நாள். உங்கள் மன உறுதியால் தொழிலில் வெற்றி பெற வேண்டும். வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் மூலமாக கிடைக்க வேண்டிய பலன்கள் சற்று தாமதமாகும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். தேக ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். வீண் செலவுகள் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் நன்மை பெறுவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் பதவி உயர்வு அடைவார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் கல்வி மேன்மை பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: எடுத்த காரியத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற மனத்தின்மை.
காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்ற சிந்தனை. இன்று உங்கள் பலவீனம்: அடுத்தவர் சின்ன குறை சொன்னாலும் அதை தாங்கிக் கொள்ளாத நிலை. வியாபாரத்தில் சின்ன சின்ன குறைகள் ஏற்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வீட்டு தேவைகளை உடனே பூர்த்தி செய்ய வேண்டும். 2 கொடுக்கல் வாங்கலில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். 3 புதிய நண்பர்களிடம் நெருக்கம் வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்
கும்ப ராசி அன்பர்களே! வெற்றிகரமான செய்திகள் வந்து சேரும் நாள். ஆடை ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். குடும்ப சுகம் மேம்படும். பெரியோர்களின் நல்லாசி கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். தொழில் துறையில் போட்டிகள் விலகும். கையிருப்பு உயரும். உங்கள் மீது வெறுப்பு கொண்டவர்கள் கூட நண்பர்களாக மாறும் நிலை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்ப்புகள் நட்பாகும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு செல்வப் பெருக்கு உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலம் அதிகரிக்கும்.
இன்று உங்கள் பலம்: மன உறுதியோடு எந்த காரியத்திலும் இறங்குவீர்கள். நேர்மையும் நிதானமும் கொண்டு செயல்படுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: அவசியமான நேரத்தில் வரவேண்டிய பண உதவி தாமதமாகும். தேவையில்லாத செலவு உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இரவு நேர பயணங்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். 2 ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட வேண்டாம். 3 உடல் ஆரோக்கியத்தில் அக்கறையோடு இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! போராட்டத்தில் வெற்றி கிடைக்கும் நாள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் லாபம் கிடைக்கும். சுற்றுலா செலவுகள் ஏற்படும். ஆட்சியாளர்களின் நட்பு கிடைக்கும். அரசு அலுவலகங்களில் நீங்கள் எதிர்பார்த்த வேலை நடக்கும். கல்வியில் பிள்ளைகள் மேம்படுவார்கள். கலையில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரத்தில் துணிச்சலான செயலால் லாபம் அதிகரிக்கும். தொழில்துறையில் புதிய முதலீடுகள் செய்யும் நிலை உருவாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வம் அதிகரிக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் ஆசைகள் நடந்தேறும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் கேட்டது கிடைக்கும்.
இன்று உங்கள் பலம்: நினைத்த காரியத்தை நிறைவேற்ற அரசு உதவி தாராளமாக கிடைக்கும். நண்பர்கள் பணம் கொடுக்க தயாராக இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: உடனே எதையும் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். சிலர் சொல்வதை அப்படியே நம்புவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தவணைப்பணம் செலுத்த தவறக் கூடாது. 2 எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். 3 குடும்ப விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம்
தேதி 10 – புரட்டாசி – பராபவ வருடம் ஞாயிறு நாள் ஞாயிறு திதி பிரதமை (up to 8:59 pm) துவிதியை (up to September 28, 7:14 pm) நட்சத்திரம் உத்திரட்டாதி (up to 11:08 am) ரேவதி (up to September 28,10:16 am) யோகம் அமிர்த யோகம் நல்ல நேரம் 7:45 – 8:45 am / 3:15 – 4:15 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11.45 am / 1:30 – 2:30 am இராகு காலம் மதியம்ா 4.30 – 6.00 எமகண்டம் மதியம் 12.00 – 1.30 குளிகை மதியம் 3.00 – 4.30 சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் சந்திராஷ்டமம் பூரம், உத்திரம் சூரியோதயம் 6:01 AM சூரிய அஸ்தமனம் 5:58 PM சந்திரோதயம் Sep 27 6:24 PM சந்திர அஸ்தமனம் Sep 28 7:09 AM



