மதுரை மற்றும் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்தால் இரண்டே மாதத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என பொதுமக்களை ஏமாற்றிய கும்பலால் 15,000 பேர் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படும் நிலையில் சுமார் 10 ஆயிரம் பேர் தற்போது வரை புகார் அளித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி கைதாகியுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மதுரை மேலூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆன்லைன் செயலிகள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி சுமார் 8500க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் ரூ.30 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றதாக. கூறப்படும் நிலையில்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காசம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது கிராமத்தை சேர்ந்த பலர், ‘FQL Exchange’ மற்றும் ‘VG Investment’ ஆகிய செல்போன் செயலிகளில் ₹50,000 முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ மோசடி மேலும் இளையராஜா உட்பட ஊர் மக்கள் பலர் பெயரில் போலி கணக்குகளைத் தொடங்கி (ID), அதில் டிஜிட்டல் கரன்சியான USDT வரவு வைக்கப்பட்டது போல கணினித் திரையில் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
தற்போது, முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது) கணக்கில் பணம் வரவு வைக்கப்படாமல் ஏமாற்றப்பட்டு, இறுதியாக அந்தச் செயலியும் முடக்கப்பட்டுள்ளது. எஃப்க்யூஎல் எக்ஸ்சேஞ்ச் இளையராஜா உட்பட சுமார் 15000க்கும் மேற்பட்டோரிடம் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்படி, ரமேஷ், விஜய், அனிதா, தீனதயாளன், பிரியதர்ஷினி, ரஞ்சித், அருண், கஜேந்திரன், திருமலை மற்றும்ஆண்டிச்சாமி ஆகியோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 340, 316(2), 318(4) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66(d)-ன் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ரமேஷ், விஜய், அனிதா ஆகிய மூவரும் கைது செய்தனர்.
குற்றப்பிரிவு காவல் துறையினர் இதேபோல், சப் ஏஜெண்டுகளாக செயல்பட்ட நத்தம் அருகே மூங்கில்பட்டி ஊராட்சி செல்லப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த வீரமணி(25) மற்றும் காசம்பட்டி பகுதி சேர்ந்த சித்திரம் மகன் விஜயன் (49),திருமலை மகன் ஜெயபிரகாஷ் (28),மூக்கன் மகன் சுரேஷ்(30),சாமிராஜ் மகன் பிரேம்நாத்(26), அவையன் மகன் மகாதேவன்(38) ஆகியோரை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். குண்டர் சட்டம் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து மதுரையில் இருந்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து முதலீட்டு தொகை தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த முதலீட்டு மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.



