சினிமா மற்றும் கார் பந்தயம் என இரண்டிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அஜித் குமார். அவரது அஜித்குமார் ரேஸிங் என்ற சொந்த அணி மூலம் ஐரோப்பா நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் பந்தய தொடர்களில் பங்கேற்று வருகிறார்.
அந்தவகையில், ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர பார்சிலோனா கார் பந்தயத்தில் பங்கேற்ற அஜித்குமாரின் அணி, ஜிடி3 ஏஎம் பிரிவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் தொடரில் பங்கேற்ற அஜித் குமார் தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்த 24ஹெச் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார்.
அதில் ஜிடி புரோ-ஏஎம் என்ற பிரிவில் பங்கேற்ற அவரது அணியின் கார் 2ம் இடத்தை பிடித்து அசத்தியது. மேலும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 5வது இடமும், கன்ஸ்டிரக்டர்ஸ் சாம்பியன்ஷிப்பில் 3வது இடத்தையும் பிடித்தது. இந்த வெற்றியை, கையில் இந்திய தேசிய கொடியை ஏந்தியும், போடியத்தில் தனது குழுவினருடன் கோப்பையை பெற்று உற்சாகமாக கொண்டாடினார் அஜித் குமார். அவருக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.



