ஈரான் 7 நிபந்தனைகள் போரை முடிவுக்கு கொண்டுவர பதிலுக்காக காத்திருப்பு

 

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி கூறுகையில், “அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு ஈரான் 7 நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அமெரிக்கா தானே உருவாக்கிய சிக்கலில் இருந்து வெளியேறவும், மேலும் அதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் விரும்பினால், ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

டிரம்பின் மிரட்டல்களால் எந்தப் பலனும் ஏற்படாது. தீர்க்கமான போருக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார். ஈரான் முன்வைத்துள்ள 7 நிபந்தனைகளின் முழுமையான பட்டியல் வெளியாகாத நிலையில், அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல், ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவை முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

இதனுடன், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதலையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் ஈரான் விரும்புகிறது. கத்தார் மூலம் இந்த நிபந்தனைகள் அமெரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, டிரம்ப் நிர்வாகத்தின் பதிலைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் அமைய உள்ளன.