6 மாதங்களில் 3,323 இந்தியர்களை நாடு கடத்திய கனடா

 

கனடா நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 3,323 இந்தியர்களை நாடு கடத்தி உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. கனடா அரசு தனது குடியேற்ற விதிகளை மிக தீவிரமாக பின்பற்றி வருகிறது. அதன்படி, குடியேற்ற விதிகளுக்கு கீழ்படியாதது, விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கி இருப்பது, போலி விசா மற்றும் ஆவண மோசடிகள், மறுக்கப்பட்ட அகதி அல்லது புகலிட கோரிக்கைகள், தற்காலிக ஊழியர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க மேற்கொண்டு வரும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமானோர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

அதன்ஒரு பகுதியாக நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில்(ஜனவரி ஜூன்) கனடாவில் இருந்து 3,323 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் 3779 இந்தியர்கள் வௌியேற்றப்பட்டனர். தற்போது முதல் 6 மாதங்களிலேயே அது 88 சதவீதத்தை எட்டி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மெக்சிகோ நாட்டினரே இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர். இந்திய நாட்டினர் 2வது இடத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அரசியல்

* 5 ஆண்டுகளில் வௌியேற்றப்பட்ட இந்தியர்கள்

2021 603

2022 786

2023 1,132

2024 2,004

2025 3,779