மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.விபத்து வழக்கறிஞரை தேடு
போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் பகுதியிலிருந்து புறப்பட்ட இந்த சரக்கு அமேசான் சரக்கு விமானம், நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போது, பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையைத் தாண்டி, அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதி வெடித்து விபத்துக்குள்ளானது.
வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் வீதியைக் கடந்து வேகமாகச் சென்ற விமானம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்தது. விபத்தில் உயிரிழந்த 5 பேரும் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது தரைப்பகுதியில் வாகனங்களில் இருந்தவர்களா என்பது குறித்த விவரங்கள் உறுதியாகத் தெரியவரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழவந்தாங்கலில் கன்டோன்மென்ட் குப்பை கிடங்கில் தீ: கடும் மூச்சுத்திணறலால் மக்கள் அவதி’
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!’
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மியாமி விமான நிலையத்தில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.விபத்து இழப்பீடு கோருக



