பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு ரஷ்யாவில் திடீரென ஏற்பட்டபனிச்சரிவில் 6 பேர் மாயம்

ரஷ்யாவில் வடக்கு காகசஸ் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதில் 6 பேர் மாயமாகியுள்ளனர். கபர்தினோ-பால்காரியாவில் உள்ள பெசெங்கி பள்ளத்தாக்கில், 33 மலையேற்ற வீரர்கள் அடங்கிய குழுவின் மீது பனிச்சரிவு ஏற்பட்டது. இவர்களில் 10 பேர் தாங்களாகவே இறங்கி வந்தனர்; 11 பேர் உயிரிழந்தனர்.

எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆறு பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அவசரகால சேவைகள் தெரிவித்தன. தேடுதல் மற்றும் மீட்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். எனினும், கடினமான நிலப்பரப்பு மற்றும் பனிச்சரிவுகள் ஏற்படும் அதிக அபாயம் காரணமாக மீட்பு பணிகள் தடைபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.