ரிவர்ஸ் மாகாணத்தில் கப்பலில் எண்ணெய் திருட முயன்ற 37 பேர் பலி

 

நைஜீரியாவின் எண்ணெய் உற்பத்தி பகுதியான ரிவர்ஸ் மாகாணத்தில் எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பலில் இருந்து சிலர் எண்ணெய் திருட முயற்சித்துள்ளனர். சட்டவிரோத இணைப்பு புள்ளியில் இருந்து தங்கள் படகுகளுக்கு அவர்கள் கச்சா எண்ணெய்யை மாற்றிக்கொண்டு இருந்ததாக தெரிகின்றது. அப்போது அதிக அழுத்தத்துடன் வெளியேறி நச்சுப்புகையை அவர்கள் சுவாசித்துள்ளனர்.

இதன் காரணமாக எண்ணெய் திருட்டில் ஈடுபட்டு இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தனர். நைஜீரிய காவல்துறை இந்த சம்பவத்தை நேற்று உறுதிப்படுத்தியது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.