முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (04) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ‘எயார்பஸ்’ விமானக் கொள்முதல் தொடர்பான சர்ச்சை மற்றும் ஊழல் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்றையதினம் காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலையானார்.
அவரிடம் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் சுமார் 05 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



