என் கண்ணு முன்னாடியே கொண்ணுட்டாங்க.. அழுது புரண்ட சுஜி!

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நேற்று முன்தினம் இரவு நகைக்காக தொழிலதிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு நகையை பறித்துச் சென்றதாக மனைவி நாடகமாடிய சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதில் கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரிவாள் மனையால் வெட்டி கொலை செய்தது அம்பலமானது.

இதனையடுத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் பூபதி. அவரது மனைவி சுஜிதாஸ்ரீ. இந்த தம்பதிக்கு 13 வயது மகனும் 10 வயதுள்ள ஒரு மகள் உள்ளனர்.

பூபதி சிமெண்ட் செங்கல் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் தனது மகனுக்கு உடல்நலம் சரியில்லாததால் எந்திரம் கட்டுவதற்காக ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்று பாலம் அருகே சென்றதாகவும், அப்போது மர்ம நபர்கள் வழிமறித்து பூபதியை வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தன்னுடைய 10 பவுன் நகை பறித்துச் சென்று விட்டதாக ஓமலூர் போலீசாருக்கு சுஜிதா ஸ்ரீ தகவல் தெரிவித்தார்.

சேலம் கொலை
இந்த தகவலை தொடர்ந்து ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணையில் காரில் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் மற்றும் ரத்தக்கரை இல்லாததும் சுஜிதாஸ்ரீக்கு எவ்வித காயமும் இல்லாததாலும் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

தொடர்ந்து சுஜிதாஸ்ரீயின் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் ரத்தக்கரை இருந்ததற்கான தடயமும் இருந்தது.

கள்ளக்காதல் கொலை

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுஜிதாஸ்ரீயிடம் கெடுக்குப்பிடி விசாரணையில் அவர் தனது கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதில் சுஜிதாஸ்ரீ வீட்டின் முன்பு வசித்து வரும் சக்திவேல் என்பவரது மகன் திருமணமாகாத ஐடி ஊழியர் சந்தோஷ்ராஜ்(33) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில் இந்த கள்ளக்காதல் சம்பவம் பூபதிக்கு தெரிய வருவே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஆத்திரம் அடைந்த சுஜிதாஸ்ரீ தனது கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

! மகனும் உடந்ததை

பின்னர் சுஜிதாஸ்ரீ சந்தோஷ்ராஜ் இருவரும் பூபதியை கீழே தள்ளி தலையணையால் மூஞ்சியில் அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் பூபதி திமிறியதால் சுஜிதாஸ்ரீ தனது 14 வயது மகனை அருவாமனை எடுத்து வர சொல்லி கணவனை அரிவாள் மனையால் பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளார்.

தொடர்ந்து சந்தோஷ்ராஜூம் கத்தியால் பூபதியை சரமாரியாக வெட்டி உள்ளார். இதையடுத்து பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆற்றுப்பாலத்தில் சடலம்

இதனை அடுத்து போலீசில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க திட்டம் தீட்டிய கள்ளக்காதலர்கள் இருவரும் அதிகாலை 4மணி வரை காத்திருந்து பின்னர் அவர்களது காரில் முன்சீட்டில் பூபதியின் சடலத்தை படுக்க வைத்து சந்தோஷ் ராஜ் காரை எடுத்துக் கொள்ள சுஜிதாஸ்ரீ தனது மகனையும் தூங்கிக் கொண்டிருந்த தனது மகளையும் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு ஓமலூர் சங்ககிரி ரோட்டில் ஆட்டுக்காரனூர் அருகே சரபங்கா ஆற்று பாலம் அருகே சென்றுள்ளனர்..

2 பேர் கைது
பின்னர் காரை நிறுத்திவிட்டு தான் அணிந்திருந்த நகையை கழட்டி சந்தோஷ்ராஜிடம் கொடுத்து அனுப்பிவிட்டு வழிமறித்து பூபதியை கொன்று விட்டு தனது நகையை பறித்துச் சென்று விட்டதாக நாடகமாடியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து ஓமலூர் போலீசார் சுஜிதாஸ்ரீ மற்றும் அவரது கள்ளக்காதலன் ஐடி ஊழியர் சந்தோஷ்ராஜியையும் கைது சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.