பிரித்தானியாவில் கடலில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரபல சுற்றுலாத் தலமான ஈஸ்ட் சசெக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் நேற்று முன்தினம் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.
லண்டனில் இருந்து குழுவாக சுற்றுலா சென்ற நிலையில், மூன்று பேர் கடலில் மூழ்கிய நிலையில் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
16 வயதுச் சிறுவன் மற்றும் 24 வயது நபர் ஆகிய இருவர் பாதுகாப்பாகக் கரை திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் இளைஞனை காப்பாற்ற போராடினர்.
நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் இளைஞன் மீட்கப்பட்ட போதும், சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.



