எனது வாழ்க்கையை பற்றி எழுதுவது எளிதாக இல்லை சோனியா

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவரான சோனியா காந்தியின் வாழ்க்கையை விவரிக்கும் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ எனும் 544 பக்க சுயசரிதை நூல் வரும் நவம்பர் 10ம் தேதி வெளியிடப்பட உள்ளது. முதல் கட்டமாக 1 லட்சம் பிரதிநிதிகள் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நூல் 1965ம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் சோனியா காந்தி ஆங்கிலம் பயின்ற காலகட்டத்தில் இருந்து தொடங்குகிறது. அங்கு தான் 19 வயது மாணவியாக இருந்த சோனியா மைனோ, ராஜீவ் காந்தியை காதலிக்கத் தொடங்கினார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் திருமணம் நடந்தது.

அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள், சோனியா காந்திக்கும் இந்திரா காந்திக்கும் இடையிலான அறிமுகம், இந்தி மொழி கற்றல், புடவை அணிதல் மற்றும் இந்திய உணவை விரும்பி உண்ணுதல், அத்துடன் காந்தி குடும்பத்தை உலுக்கிய துயரச் சம்பவங்கள் ஆகியவற்றை நூல் விவரிக்கிறது.தெற்காசிய கலாச்சார நிகழ்வுகளை ஆராய்தல்

இந்த நூல் குறித்து சோனியா காந்தி கூறுகையில், ‘‘எனது வாழ்க்கையை பற்றி எழுதுவது எனக்கு எளிதாக அமையவில்லை. மனவேதனையும் இழப்புமே என்னை அரசியல் எனும் பொது வாழ்க்கைக்குள் தள்ளின. அதுவரை எனது தனிப்பட்ட வாழ்க்கையை நான் மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தேன். எனது குடும்பத்தை பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. இத்தாலியின் சிறிய நகரத்தில் கழிந்த எனது குழந்தைப் பருவத்தின் எளிமையிலிருந்து, இந்தியாவில் கழிந்த பிற்காலத்தின் சிக்கலான சூழலை நோக்கிய பயணமாகவே இந்நூல் இருக்கும்’’ என்றார்.