வெற்றிகரமாக ராக்கெட்டை தரையிறக்கி சீனா சாதனை

விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்பும் செலவை குறைப்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் மறுபயன்பாட்டை ராக்கெட் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில்,

சீனா விண்வெளியில் இருந்து திரும்பிய ராக்கெட்டை முதல் முறையாக நிலத்தில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஜுகே3 ராக்கெட் நேற்று காலை வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில் விண்வெளியில் செயற்கைகோளை நிலைநிறுத்திய பின், ராக்கெட்டின் முதல் பகுதி செங்த்தாக தரையிறங்கியது.