கொழும்பு துறைமுக நகரில் சொகுசு படகில் இளைஞர் யுவதிகளுக்காக நடத்தப்பட்ட விருந்துபசாரம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உரிமமின்றி மதுபானம் விற்பனை செய்த இரண்டு சிற்றுண்டிச்சாலைகள் உள்ளிட்ட 3 இடங்களும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி சிறப்புக் செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சந்தை மதிப்புடைய 19,500 மில்லிலீட்டர் உள்நாட்டு மதுபானம், 45,400 மில்லிலீட்டர் வெளிநாட்டு மதுபானம் மற்றும் 2,44,925 மில்லிலீட்டர் பியர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கைது
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி சிறப்புக் செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த 3 சந்தேக நபர்களும் கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய இளைஞன்
கொழும்பில் பணச் சலவைச் சட்டத்தின் கீழ் பதின்ம வயது இளைஞன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான உண்டியியல் முறையில் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நபர் ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
குற்றங்கள் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று மாலை வெள்ளவீதி பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணச் சலவை
இந்த நிலையில் 10,467,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டமைக்கான முறையான ஆவணங்களை குறித்த இளைஞனால் உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளது.
பணச் சலவைச் சட்டத்தின் கீழ் மற்றும் போலியான 1000 ரூபாய் நாணயத்தாள்களுடனும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிருலப்பனை பகுதியை சேர்ந்த 19 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது.
குற்றங்கள் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.



