46 கோடி ரூபாய் செக் மோசடி அம்பிகா கண்ணீர் பேட்டி!-VEDIO

 

நடிகை ராதா தன்னுடைய அக்கா அம்பிகாமோசடி

செய்துவிட்டதாக புகார் கொடுத்த நிலையில், அம்பிகா அதற்கான விளக்கம் கொடுத்துள்ளார்.

80களில் பிரபல நடிகைகளாக விளங்கிய அம்பிகா–ராதா சகோதரிகள் இடையே சென்னை ஏ.ஆர்.எஸ் கார்டன் சொத்து விவகாரம் தீவிர மோதலாக வெடித்துள்ளது. ராதா, 46 கோடி ரூபாய் காசோலை மோசடி குற்றச்சாட்டில் அம்பிகாவை குற்றம் சாட்ட, பதிலளித்த அம்பிகா, ராதாதான் தங்களுக்கு 97 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியவர் என்றும், உண்மை வெளிவந்தால் ராதா சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என கண்ணீருடன் கூறியுள்ளார்.

தமிழ்சினிமாவின் 80ஸ் காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஹீரோயின்களாக வலம்வந்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் ராதா. அக்கா, தங்கைகளாக இருந்தபோதும் தங்களுடைய நடிப்பு திறமையால் தங்களுக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்த இவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்கள். தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கும் இவர்கள், சின்னத்திரையில் சீரியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகின்றனர்.

இந்தநிலையில் சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே சென்னையில் உள்ள ஏஆர்எஸ் கார்டன் சொத்து விவகாரம் தொடர்பாக கடுமையான மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்ற நடிகை ராதா, தன் வீட்டில் இருந்த செக்கை திருடி அம்பிகா மற்றும் அவரது தம்பி 46 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக கண்ணீர் மல்க புகார் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்பிகா, ராதாவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவர் தான் தங்களுக்கு 97 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும், உண்மையை சொன்னால் ராதா தான் சிறைக்கு செல்லவேண்டிவரும் என பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் நடிகை அம்பிகா, “எனக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு ராதா கொடுத்த 3 காசோலைகள் பவுன்ஸ் ஆகிவிட்டன. சொத்து தகராறை தீர்க்க காசோலை தந்தது ராதாதான், அதை போடாமல் நிறுத்தியதும் அவர்தான். காசோலை மோசடி செய்ததற்காக ராதா மீது நான்தான் புகார் கொடுத்திருக்க வேண்டும்.

ஏ.ஆர்.எஸ் கார்டன் தனது சொந்த உழைப்பில் உருவானது. அச்சொத்திலிருந்து தனது பெயரைத் தன்னிடம் கேட்காமலேயே நீக்கிவிட்டார்கள். அவருக்காக நிறைய செய்திருக்கிறேன், ஆனால் அவருடைய கணவர் என்னை அவள், இவள் என்று மரியாதை இல்லாமல் பேசுகிறார். இதற்கெல்லாம் மேல் என்னை திருடி என்று சொல்லிவிட்டார்கள், நான் என்ன திருடியா?” என கண்ணீருடன் பேசினார்.