வங்கதேச நடிகை தூக்கில் தொங்கிய கொலை

வங்கதேசத்தின் டாக்கா நகரில் உள்ள பாசுந்தரா குடியிருப்புப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நடிகை ரிதிகா ரிதி (26), மாடலிங் துறையில் பிரபலமானவர். இந்த நிலையில், நேற்று இவரது வீட்டில் இருந்து அசாதாரணமான சூழல் நிலவுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த பதாரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, ரிதிகா ரிதி வீட்டின் ஃபேன் கொக்கியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

ரிதிகா ரிதி தங்கி இருந்த வீட்டில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும்.