மேஷ ராசி அன்பர்களே! இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். புதிய அனுபவங்களை கிடைக்கும். வியாபாரம் நிமித்தமாக வெளியூர் வாய்ப்பு உருவாகும். தொழிலில் புதிய முயற்சிகளில் இறங்கும் காலம் இது. பணவரவு அதிகரிக்கும். செல்வாக்கு பெருகும். எதிர்பார்த்த ஒரு விஷயத்தில் வெற்றி உண்டாகும். செலவுகள் குறைந்து நிம்மதி ஏற்படும். தெற்கு திசையில் இருந்து முக்கிய செய்தி வந்து சேரும். வேலை இடத்தில் பெருமையும் பாராட்டும் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்புகள் சேரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள். இன்று உங்கள் பலம்: உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். செயல் திறன் சிந்தனை அதிகரிக்கும். இன்று உங்கள் பலவீனம்: பயனற்ற விஷயங்களை சிந்தித்துக் கொண்டிருப்பது. அடுத்தவர் பேச்சை அதிகமாக கேட்கக் கூடாது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவுக்குத் தகுந்த மாதிரி செலவு செய்ய வேண்டும். 2 நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை இன்றே திட்டமிட வேண்டும். 3 புதிய நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியம் தடை இன்றி நடக்கும் நாள். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சமூகமாக நடக்கும். சேமலாபங்கள் கூடும். புனித யாத்திரை செல்லுகின்ற நிலை உண்டாகும். உறவினர்கள் வீட்டிற்கு வருவதால் குடும்பம் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். வீட்டை புதுப்பிக்கும் வேலை நடக்கும். வாகன யோகம் வந்து சேரும். ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். வடக்கு திசையிலிருந்து அனுகூலமான செய்தி வரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலையை சிறப்புடன் செய்வார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வேண்டிய உதவி கிடைக்கும். இன்று உங்கள் பலம்: கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையும் புரிதலும் ஏற்படும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் தெளிவு உண்டாகும். இன்று உங்கள் பலவீனம்: நெருக்கமானவர்களிடம் முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 செலவுகளை கவனமாக எழுதி வைக்க வேண்டும். 2 ஆன்லைன் செயல்பாடுகளில் எச்சரிக்கை தேவை. 3 நேரம் தவறாமல் வேலைக்குச் செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! உங்களுக்கு இனிப்பான செய்திகள் வந்து சேரும் நாள். வேலையில் புதிய அனுபவம் உண்டாகும். உங்கள் தேவைகள் அனைத்தும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறும்.பணவரவில் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும் பின்னர் அது நிறைவை கொண்டு வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு பக்கபலமாக இருக்கும். வேலை இடத்தில் பதவி உயர்வு உண்டாகும். வெளியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்குப் பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மைகள் அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். புதிய நபர்களின் அறிமுகம் பலமாக அமையும். இன்று உங்கள் பலவீனம்: நீங்கள் எதிர்பார்த்த காரியத்தில் சில இடையூறு ஏற்படும். கவனமாக இருந்தாலும் செலவுகள் கூடும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனங்களில் செல்லும்போது சிந்தனைகள் சிதறக்கூடாது. 2 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அலட்சியம் இருக்கக் கூடாது. 3 அரசு அதிகாரிகளிடம் பகைத்துக் கொள்ளக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! மனதிற்கு நிம்மதியான செய்தி வரும் நாள். பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டு. அரசாங்க வேலையில் அரசியல்வாதி ஒருவரின் உதவி கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். நிலம் வாங்கி விற்கும் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய முறைகளில் செயல்பட வேண்டிய நிலை உருவாகும். வெளியூர் பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும் அனுகூலமும் சிறப்பாக இருக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எண்ணியது நிறைவேறும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கையிருப்பு கூடும். இன்று உங்கள் பலம்: எதிர்காலம் குறித்து விரிவாக திட்டம் போடுவீர்கள். மனதில் இருந்த கவலை நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். இன்று உங்கள் பலவீனம்: உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். புதிய நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அனாவசியமான வார்த்தைகளை பேசி விடக்கூடாது. 2 வேலை இடத்தில் அலட்சியம் சிரமத்தை கொண்டு வரும். 3 வெளியூர் பயணத்தின் போது சாப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! உங்களுக்கு பெருமையை கொண்டு வரும் நாள். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும். வேலை இடத்தில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டு, பதவி உயர்வு உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான செய்தி வெளியூரிலிருந்து வந்து சேரும். நண்பர்கள் மனம் அறிந்து உதவி செய்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிறப்பான நிகழ்வுகள் நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: வெளியூரிலிருந்து நீங்கள் எதிர்பார்த்த நண்பர் உதவி செய்வார். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை செயல்படுத்துவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் சட்டென்று கோபப்படுவது. எந்தப் பிரச்சனையிலும் அவசரப்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 சேமிப்பு சேர்ந்த விஷயங்களில் குழப்பம் கூடாது. 2 உறவினர்களிடம் கோபத்தை காட்டக்கூடாது. 3 கடன் குறித்த பிரச்சினைகளில் கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான பலன்கள் வரும் நாள். போட்டி பந்தயங்களில் ஈடுபட வேண்டாம். ஆன்லைன் வர்த்தகத்தில் எச்சரிக்கை தேவை. ஆசை வார்த்தைகளுக்கு மயங்க கூடாது. நீங்கள் மிகவும் எதிர்பார்த்த காரியத்தில் சுணக்கம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலைச்சல் அதிகமாகும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன நிம்மதி குறையும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலையில் துன்பம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரியம் தாமதமாகும். இன்று உங்கள் பலம்: எதிர்பாராத வரவுகள் மூலம் நெருக்கடியான சூழல் மறையும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். இன்று உங்கள் பலவீனம்: நடக்கும் என்ற காரியத்தில் சுணக்கம் உண்டாகும். நல்லது செய்தாலும் சில நேரம் கெட்ட பெயர் ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 உரிய நேரத்தில் தவணை பணம் கட்ட தவறக் கூடாது. 2 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். 3 அடுத்தவருக்கு ஜாமீன் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! தொட்ட காரியங்கள் நடக்கும் நாள். சிறப்பான நன்மைகள் வந்து சேரும். வியாபாரம் நிமித்தமாக செல்லும் பணிகளில் வெற்றி கிடைக்கும். செல்வச் சேர்க்கை முயற்சிகள் கைகூடிவரும். சிந்தனை திறன் செயல்பாடுகள் மேம்படும். சொத்து விஷயத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத உயர்வு உண்டாகும். தாய் மாமனின் வகையில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு தொழில் வெற்றியாகும் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் உயர்வு அடைவார்கள். இன்று உங்கள் பலம்: குழந்தைகளின் எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள். பூர்வீக சொத்தின் மூலமாக அனுகூலம் தேடி வரும். இன்று உங்கள் பலவீனம்: போட்டியாளர்களால் தொழிலுக்கு ஏற்படும் இடையூறு. எதிர்பார்த்த சில காரியங்கள் தள்ளிப் போவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 நேரம் தவறாமல் காரியம் செய்ய பழக வேண்டும். 2 வரவு செலவு கணக்கை சரியாக வைத்திருக்க வேண்டும். 3 அடுத்தவருக்கு ஜாமீன் போடுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! அனுகூலமான பலன்கள் வந்து சேரும் நாள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை இடத்தில் உங்களில் பெருமை மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும். போட்டி பந்தயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும். குலதெய்வத்தினுடைய அருள் உண்டாகும். வாகனப் பிரார்த்தி ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். வங்கி இருப்பு உயர்ந்து மன நிம்மதியை கொடுக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு உயரும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நிறைவேறும். இன்று உங்கள் பலம்: தன வரவுகளில் இருந்த ஏற்ற இறக்கங்கள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள் இன்று உங்கள் பலவீனம்: எதிர்பார்த்த முக்கிய செய்தி கிடைக்க தாமதமாகும். மன அழுத்தம் ஏற்பட்டு மன உறுதி குறையும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 உடன் பிறந்தவருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். 2 மனைவி சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். 3 உறவுகளிடம் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! தித்திப்பான செய்திகள் வந்து சேரும் நாள். விளையாட்டுத்தனமாக செய்கின்ற காரியத்தில் கூட வெற்றி கிடைக்கும். தொழில் துறையில் இருந்த போட்டிகள் விலகும். மங்கல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நடக்கும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்பு உண்டாகும். புனித யாத்திரை செல்லக்கூடிய நிலை உருவாகும். வேலை இடத்தில் பதவி உயர்வு உண்டாகும். சேமலாபங்கள் அதிகரிக்கும். யோக பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். கையிருப்பு கூடும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு தன வரவு அதிகரிக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் தொழில் விருத்தி அடையும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நிறைவேறும். இன்று உங்கள் பலம்: சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்களும் செயல்களும் சாதகமாக அமையும். காப்பீட்டு துறையில் கவனம் செலுத்துவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: வித்தியாசமான கற்பனைகள் நெருக்கடியை உண்டாக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்களும் தடுமாற்றமும் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வியாபாரம் சம்பந்தப்பட்ட புரிதல்களை அதிகரிக்க வேண்டும். 2 வீட்டு விஷயங்களை வேலை இடத்தில் சொல்லக்கூடாது. 3 குழந்தைகள் கேட்ட பொருளை வாங்கி கொடுக்க மறக்க கூடாது. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! அலைச்சலுக்கு பின்னே காரியங்கள் நிறைவேறும் நாள். தொழிலை அக்கறையோடு கவனிக்க வேண்டும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடக்கூடாது. அரசாங்க அதிகாரிகளிடம் பகைக்க வேண்டாம். வருமானம் சற்று குறைவாக இருந்தாலும் செலவுகளும் மட்டுப்படும். வெளியூர் பயணங்களில் சில சிரமங்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி கிடைக்க தாமதமாகும். குடும்பத்தினர் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் மிதமான அனுகூலம் பெறுவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் பதவி உயர்வு தாமதமாகும். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வியாபாரம் மந்தமாக நடக்கும். இன்று உங்கள் பலம்: மனதில் இருந்த தயக்கங்கள் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் உங்கள் மதிப்பு உயரும். இன்று உங்கள் பலவீனம்: கடன் பிரச்சனைகள் கொஞ்சம் கவலைப்பட வைக்கும். பூர்வீக சொத்துக்கள் விஷயம் இழுபறி ஆகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 சீட்டு போடுவது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. 2 தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பார்க்க வேண்டும். 3 வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! உங்களை நினைத்து நீங்கள் பெருமைப்படும் நாள். திட்டம் போட்டு காரியங்கள் செய்து லாபம் பார்ப்பீர்கள். தொழிலில் மேன்மை உண்டாகும். நீண்ட நாள் வசூல் ஆகாமல் இருந்த கடன் தற்போது கைக்கு வந்து சேரும். மனைவி கேட்ட பொருளை வாங்கி கொடுத்து குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெற்கு திசையில் இருந்து தொழிலுக்கு தேவையான செய்தி வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்ப்புகள் மறையும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு தன வரவு கூடும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும். இன்று உங்கள் பலம்: உயர் பொறுப்பில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூரில் இருந்து தேவையான உதவி வந்து சேரும். இன்று உங்கள் பலவீனம்: நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. யோசிக்காமல் சில காரியத்தில் இறங்கி விடுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வியாபார பணிகளில் நிதானத்தோடு செயல்பட வேண்டும். 2 வீட்டில் பணம் நகைகளை பத்திரமாக வைக்க வேண்டும். 3 ஆன்லைன் வர்த்தகங்களில் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! எதிர்ப்புகள் விலகி யோக பலன் கிடைக்கும் நாள். வேலை இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடக்கூடாது. அனாவசியமான செலவுகள் செய்ய வேண்டாம். கடன் வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேளா வேளைக்கு சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் இருக்கும் சிக்கல்களை விலக்க முயற்சி செய்ய வேண்டும். அரசாங்க வேலைகள் தள்ளிப் போகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு கூடும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நடக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் விரும்பியது கிடைக்கும். இன்று உங்கள் பலம்: தொழிலில் புதிய திருப்பத்தை உண்டாக்குவீர்கள். பணவரவை அதிகரித்து சாதனை செய்வீர். இன்று உங்கள் பலவீனம்: எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடி உருவாகும். கடன் வாங்கி கடன் கொடுப்பது நல்லதல்ல. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேடிக்கையான பேச்சுகளில் கவனமாக இருக்க வேண்டும். 2 முக்கிய முடிவுகளை குடும்ப உறுப்பினருடன் ஆலோசித்து எடுக்க வேண்டும்.. 3 வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய நல்ல நேரம் பஞ்சாங்கம் தேதி 15 – புரட்டாசி – பராபவ வருடம் வெள்ளி நாள் வெள்ளி திதி சஷ்டி (up to 10:15 am) சப்தமி (up to October 03, 8:00 am) நட்சத்திரம் ரோஹிணி (up to 4:27 am) மிருகசீரிடம் (up to October 03,2:54 am) திருவாதிரை (up to October 04,1:29 am) யோகம் மரண-சித்த யோகம் நல்ல நேரம் 9:15 – 10:15 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 12:15 – 1:15 am / 6:30 – 7:30 pm இராகு காலம் காலை 10.30 – 12.00 எமகண்டம் மதியம் 3.00 – 4.30 குளிகை காலை 7.30 -9.00 சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் சந்திராஷ்டமம் விசாகம் சூரியோதயம் 6:01 AM சூரிய அஸ்தமனம் 5:54 PM சந்திரோதயம் Oct 02 10:48 PM சந்திர அஸ்தமனம் Oct 03 12:17 PM



