2026 ஆம் ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் சுமார் 1605 வீதி விபத்துக் கள் பதிவாகி உள்ளதுடன், 1693 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரி வித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகளும், 603 மோட்டார் சைக்கிள் ஓட் டுநர்களும், 119 மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தோரும், 115 மிதிவண்டி ஓட்டுநர்களும், 136 சாரதிகளும் மற்றும் 162 பயணிகளும் அடங்கி உள்ளனர்.
இதுவரையில் 3,125 பாரிய விபத்துக்களும், 6,477 சிறு விபத்துக்களும் மற்றும் 2,388 சேத விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப் பிடுகையில் வீதி விபத்துக்க ளின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.


