சீனாவினால் உள்நாட்டிலேயே தயாரித்து உருவாக்கப்பட்டுள்ள ‘C919’ பயணிகள் விமானம், தனது முதலாவது சர்வதேச வணிக ரீதியிலான வான்வழிச் சேவையை ஓகஸ்ட் 12 ஆம் திகதி தொடங்கவுள்ளதாக ‘எயர் சைனா’ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வான்வழிப் பாதை, சீனாவின் தலைநகரான பீஜிங்கை, மங்கோலியாவின் தலைநகரான உலன்பாதாருடன் நேரடியாக இணைக்கவுள்ளது.
சீனாவின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான பயணிகள் ஜெட் விமானம் 25 நகரங்களை இணைக்கும் 57 வான்வழிப் பாதைகளில் வெற்றிகரமாகச் சேவையாற்றியுள்ளதுடன், 7.5 மில்லியனுக்கும் அதிகமான பயணியர் பயணங்களைச் கையாண்டு சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



