கேரள மேகா தம்பதி வீட்டை விட்டு வெளியேறிய மனைவி – பின்னணி என்ன?

 

கேரள மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஸ்ப்ளூயன்ஸரின் மனைவி ஓட்டுநர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த பின்னணி விரிவாக பார்க்கலாம்.

முன்பெல்லாம் பிரபலமாக வேண்டும் என்றால் திரைப்படங்கள், மற்றும் பாடல் காட்சிகள், செய்திகள் மூலம் வெளிவந்தால் மட்டுமே பலராலும் அறியப்படும் .ஆனால் தற்பொழுது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் நொடிகளிலேயே பிரபலமாகி விடுகிறோம். குறிப்பாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக், twitter உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டால் போதும்.

அது லட்சக்கணக்கான மக்களிடையே சென்று கவனம் பெற்று வருகிறது. தினசரி வாழ்க்கை முறை, பயணம், ஃபேஷன், சமையல், உடற்பயிற்சி உள்ளிட்ட வீடியோக்களை உருவாக்குகிறார்கள். பின்னால் அவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை பயன்படுத்தி ஒரு ப்ராடக்ட் ப்ரமோஷன் செய்வது அல்லது தங்கள் தொடங்கிய தொழிலை பிரபலமாக்குவதன் மூலம் பல இன்ஸ்டாகிராம் இன்ஸ்ப்ளூயன்ஸர்கள் பயனடைந்து லட்சகணக்கில் பணம் சம்பாதித்து, வீடு, கார் உள்ளிட்டவை வாங்குகின்றனர்.

கேரளா இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மனைவி
அந்த வகையில் கேரளாவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஸ்ப்ளூயன்ஸரின் மனைவி செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது. கேரளாவில் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜோடியாக அகில் – மேகா தம்பதி இருந்து வந்தனர். ஒரே தெருவில் வசித்து, காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், தங்களது குடும்ப வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடிக்கு தனி வரவேற்பும் கிடைத்தது.

இந்த நிலையில், அகில் – மேகா தம்பதியின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சில தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு மேகாவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதாகவும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அகில் மேகா தம்பதி விவகாரம்
விசாரணையின்போது, மேகா வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் உள்ளிட்ட சில பொருட்களை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் உள்ளூர் பேருந்து ஓட்டுநர் ஒருவருடன் வெளியே சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையில், மேகா அந்த பேருந்து ஓட்டுநருடன் சென்றது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அந்த ஓட்டுநருக்கு சமீபத்தில் அரசு வேலை கிடைத்ததாகவும், அவருக்கு ஏற்கனவே சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக புகார்கள் இருந்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் வெளியாகவில்லை.

மேகா வைரல் வீடியோ
மேலும், மேகா சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியதாகக் கூறப்படும் வீடியோவும் தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், தனது கணவர் அகிலுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதுவே தான் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் என்றும் மேகா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறம், சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான அகில், சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் கிடைத்த வருமானம் மூலம் மாதம் சுமார் ரூ.10 லட்சம் வரை சம்பாதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீஸ் விசாரணைக்கு பிறகு முழு விவரம் தெரிய வரும்
இந்த விவகாரம் குறித்து அகில் அமைதியாக இருந்து வருவதாகவும், மேகா குறித்து யாரும் தவறான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீஸ் விசாரணை மற்றும் இருதரப்பினரின் அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வெளியாகிய பிறகே முழுமையான உண்மை தெரியவரும்.