பெட்டியில் பிரிட்டிஷ் பெண் ஒருவரின் சடலம்: ஏதன்ஸ் நகரில்

 

பெட்டி ஒன்றின் உள்ளே பிரிட்டிஷ் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏதன்ஸ் நகரில் அதிர்ச்சி சம்பவம் கிரீஸ் தலைநகர் ஏதன்ஸிலேயே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில், 38 வயது பெண் ஒருவர் சைப்ரஸிலிருந்து (Cyprus) கிரீஸுக்குச் சென்றதாகத் தெரிகிறது. ஜூலை 18ஆம் திகதி, ஏதன்ஸில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒரு கட்டடத்தில் அந்தப் பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது.

வீடற்ற ஒருவர் அது பற்றிய தகவலைக் காவல்துறையினருக்குத் தெரிவித்திருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பே அந்தப் பெண் இறந்துபோயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவரது இறப்புக்கான காரணம் என்ன? என்பது குறித்துக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கைச் சேர்ந்த எலிசபெத் ஜேன் ரோஸ் (Elizabeth Jane Ross) என்ற 38 வயது பிரிட்டிஷ் பெண் என இன்டர்போல் (Interpol) மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் உதவியுடன் கிரீஸ் காவல்துறை அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளது.

அவர் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு சைப்ரஸ் வழியாக கடந்த ஜூன் 29ஆம் திகதி கிரீஸை அடைந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏதன்ஸின் ‘கிப்செல்லி’ (Kypseli) பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கட்டடத்தில் கண்டெடுக்கப்பட்ட இச்சடலம் குறித்து, இது ஒரு குற்றச் செயலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.