ரஷ்யாவின் மேலும் சில எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தடுத்து அழிக்கும் வான்பாதுகாப்பு அமைப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவின் போர்க்கால பொருளாதாரத்தை சீர்குலைக்கவும், சிக்கலை ஏற்படுத்தும் வகையிலும் உக்ரைன் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.
இதன் எதிரொலியாக ரஷ்யாவின் உட்பகுதிகளில் உள்ள மேலும் சில எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் ரஷ்ய மக்களிடையே கலக்கத்தையும், எரிபொருள் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி உள்ளன. கிழக்கு உக்ரைனில் இருந்து சுமார் 1300கி.மீ. தொலைவில் இருக்கும் பாஷ்கார்டோஸ்தானில் உள்ள ஒரு சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுமார் 700கி.மீ. தொலைவில் உள்ள யாரோஸ்லாவ் பிராந்தியததில் உள்ள மற்றொரு சுத்திகரிப்பு நிலையத்தையும் உக்ரைன் படைகள் தாக்கியதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.



