உயிரை மாய்த்துக்கொண்ட சவுக்கு சங்கரின் 13 வயது மகன்! நடந்தது என்ன?

 

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன், தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Savukku Shankar Son : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன், விழுப்புரத்தில் உள்ள மரக்காணத்தில், 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில், யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். சவுக்கு சங்கருக்கும், அவரது மனைவி ஆர்த்தியும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தியோ ஆழிசை என்கிற மகன் இருக்கிறார். இவர், தன்னுடைய தாத்தா-பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவர், மரக்காணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

உயிரை மாய்த்துக்கொண்ட சிறுவன்

சிறுவன் தியோ ஆழிசை, வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, தங்கள் வீட்டிற்கு பின்பக்கம் இருக்கும் வேப்பமரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர், சிறுவன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, சிறுவன பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கின்றனர்.

பிரேத பரிசோதனை:

சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே, மரக்காணம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக புதுச்சேரியில் இருக்கும் தனியார் மருத்துவமனைகு அனுப்பு வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பள்ளி மாணவர், மிக இளம் வயதில் இப்படி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியதோடு சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.