அவசர பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரான் அமைச்சருக்கு பாக். அழைப்பு

 

ஈரான் மீதான திட்டமிடப்பட்ட ராணுவத் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். ஒரு ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் எனத் தோன்றியதால், காத்திருக்குமாறு கூட்டாளிகள் தன்னை வலியுறுத்தியதாக அவர் கூறினார். அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான ராஜதந்திர முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக, ஈரான் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக,விரைவில் இஸ்லாமாபாத்திற்கு வரு மாறு அழைப்பு விடுத்தார்.