இந்திய வம்சாவளி உட்பட 25 பேரின் குடியுரிமையை பறிக்க அமெரிக்கா உத்தரவு

 

இந்திய வம்சாவளியான நரீந்தர் சிங்(65) கடந்த 1996ல் அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக இவர் போலியான அடையாளங்களை பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, நரிந்தர் சிங் 1996-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நுழைவதற்காக இரண்டு அடையாளங்களைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த ஜியா முராத் பட்டி மற்றும் முகமது வாசிப் ஆகிய இருவரும் போலியான அடையாள ஆவணங்களுடன் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சம்மந்தமாக மொத்தம் 25 பேரின் குடியுரிமையை பறிக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் தற்காலிக தலைமை வழக்கறிஞர் டாட் பிளான்ச் கூறுகையில், அமெரிக்கக் குடியுரிமை என்பது தேசத்தின் மிக உயர்ந்த சிறப்புரிமைகளில் ஒன்றாகும். மேலும் அது சட்டப்பூர்வமாகவும் நேர்மையாகவும் பெறப்பட வேண்டும், என்று தெரிவித்தார்.