ரீல்ஸ் பதிவிட்ட சில நிமிடங்களில் பெண் கொடூரமாகக் கொலை!

 

பஞ்சாப் மாநிலத்தில் காதலும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு சமூக வலைதளக் காணொளி, சில நிமிடங்களிலேயே ஒரு கொடூரமான கொலை வழக்குக்கான முக்கிய ஆதாரமாக மாறிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஃபசில்கா (Fazilka) மாவட்டத்தில், தனது முன்னாள் மனைவியைச் சந்தித்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reel) வீடியோ எடுத்த முன்னாள் கணவன், அவரை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவும் பின்னணிப் பாடலும்
கொலை செய்யப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, 42 வயதான சரோஜ் என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு காணொளியைப் பதிவேற்றினார். அந்த வீடியோவில் சரோஜும் அவரது முன்னாள் கணவரான குர்மீத் சிங்கும் இணைந்து புன்னகையுடன் மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றனர்.

என்ற சோகக் காதல் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த வீடியோ பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தப் பெண் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சரோஜை நேரில் சந்தித்த குர்மீத், அவருடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்த பிறகு, அவரை புதர்கள் நிறைந்த ஆள்நடமாட்டமில்லாத ஒரு தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்துத் திடீரென கூர்மையான ஆயுதத்தால் சரோஜை தாக்கியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த சரோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, கொலையை மறைக்கவும் சாட்சியங்களை அழிக்கவும் எண்ணிய குர்மீத் சிங், சரோஜின் உடலை அங்கிருந்த ஒரு பள்ளத்தில் போட்டு புதைக்க முயன்றுள்ளார்.

சரோஜ் தாக்கப்பட்டபோது எழுப்பிய அலறல் சத்தத்தைக் கேட்டு, அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் உடனடியாகச் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடிவந்துள்ளார். யாரோ வருவதைக் கவனித்த கொலையாளி குர்மீத் சிங் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

உடனடியாக அந்த ஆட்டுமேய்க்கும் நபர் கிராமமக்களுக்குத் தகவல் தெரிவிக்க, கிராம மக்கள் காவல்துறையினருக்குப் புகாரளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சரோஜின் உடலைத் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக ஃபஜில்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பஞ்சாப் மாநிலக் காவல்துறை, தப்பி ஓடிய முன்னாள் கணவர் குர்மீத் சிங்கை அதே கிராமத்தில் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். சமாதானம் பேசுவதாகக் கூறி அழைத்துச் சென்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட கையோடு முன்னாள் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் பஞ்சாபில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.