யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட கம்சி குணரட்னம்நோர்வேயின் போக்குவரத்து அமைச்சர்

 

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட கம்சி குணரட்னம் நோர்வே நாட்டின் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நோர்வே – ஒஸ்லோவில் வசிக்கும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான கம்சி குணரட்னத்திற்கு கடந்த 11ஆம் திகதி அமைச்சு பதவி வழங்கப்பட்டது.

நோர்வே பிரதமர் Jonas Gahr Stல்re-இனால் அண்மையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனுடாக 38 வயதான கம்சி குணரட்னத்திற்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் கம்சி குணரட்னத்திற்கு வழங்கப்பட்ட அரசியல் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியுள்ளதால் நாட்டை ஒன்றிணைக்கும் வீதிகள், ரயில்கள், பொதுப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் போக்குவரத்திற்கு பொறுப்பாக செயற்படுவாரென நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1988-இல் பிறந்த கம்சி குணரட்னம், 1991ஆம் ஆண்டு உள்நாட்டு போர் காரணமாக தனது குடும்பத்துடன் நோர்வேயிற்கு இடம்பெயர்ந்தார்.

நோர்வே ஒஸ்லோ நகர சபையில் 14 ஆண்டுகள் பதவி வகித்த அவர் 2015 முதல் 2021 வரை 06 வருடங்கள் துணை மேயராக கடமையாற்றியுள்ளார்.

2025-இல் 2ஆவது தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான கம்சி குணரட்னம், போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் தொடர்பான குழுவின் உப தலைவராக நியமிக்கப்பட்டார்.