ஜேர்மனியில் இந்த ஆண்டில் இதுவரை கடும் வெப்பத்தால் 9,800 பேர் உயிரிழப்பு

 

ஜேர்மனியில் இந்த ஆண்டில் இதுவரை வெப்ப அலை மற்றும் கடும் வெப்பம் சார்ந்த காரணங்களால் சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ‘ஆர்.கே.ஐ’ சுகாதார மையம் தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் பல பகுதிகளில் வெப்பநிலை மீண்டும் 40 டிகிரி செல்சியஸைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

வெப்பம் சார்ந்த உயிரிழப்புகளில் அதிக விகிதத்தினர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்கள் என ‘ஆர்.கே.ஐ’ சுகாதார மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாராந்திர சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸைக் கடக்கும் காலங்களில் இறப்பு விகிதம் கணிசமாக அதிகரிக்கிறது.

இதனால் இந்த கோடைகாலத்தில் ஏற்படும் வெப்ப அலைகள் மேலும் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.