
ரியாலிட்டி நிகழ்ச்சியில் கணவர் பற்றி பேசியதற்காக வருத்தப்படவே இல்லை என்று பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் காதல் மனைவி சுனிதா தெரிவித்திருக்கிறார். கோவிந்தாவுக்கு நிஜமாகவே நிறைய பெண்களுடன் தொடர்பா என்று மக்கள் பேசி வருகிறார்கள்.
சுனிதா பேச்சு: பாலிவுட் பிரபலங்களான ஃபரா கான், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் தொகுத்து வழங்கி வரும் லாக் அப் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா தானாக வெளியே வந்துவிட்டார். உடல்நலம் சரியில்லை என்று சொல்லி அவர் கிளம்பிவிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சக போட்டியாளர்களான ஷில்பா ஷிண்டே, ராம் கபூரிடம் சுனிதா கூறியதாவது, கோவிந்தா என் கணவர். அவருக்கு 50 பேருடன் கள்ளத்தொடர்பு இருந்தாலும் அவர் எனக்கு புருஷன், நான் அவருக்கு மனைவி. என் கணவர் பற்றி யாரும் எதுவும் சொல்லக் கூடாது என்றார்.
அதை கேட்ட ரசிகர்களோ கோவிந்தாவின் மனைவி என்ன இப்படி சொல்லிவிட்டார் என்று பரபரப்பாக பேசினார்கள். இந்நிலையில் பலர் பார்க்கும் டிவி நிகழ்ச்சியில் கோவிந்தா பற்றி அப்படி பேசியதற்கு வருத்தப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என பதில் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது, என்னையும், கோவிந்தாவும் போன்று உண்மையாக காதலித்தால் எல்லாம் புரியும். நாங்கள் 40 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறோம். உண்மையான காதல் இருந்தால் அதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஏனென்றால் மனைவி மனைவி தான். அவர் இடத்தை வேறு யாராலும் பிடிக்க முடியாது என்றார்.
விவாகரத்து கேட்டார்: கோவிந்தாவும், சுனிதாவும் காதலித்து 1987ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு டீனா என்கிற மகளும், யஷ்வர்தன் என்கிற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் கோவிந்தா தனக்கு உண்மையாக இல்லை என்றும், கொடுமைப்படுத்துகிறார் என்றும் சொல்லி நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார் சுனிதா. அதன் பிறகு சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டவே அந்த மனுவை வாபஸ் பெற்றுவிட்டார்.
வளர்ந்த பிள்ளைகள் இருக்கும்போது சுனிதா அஹுஜா விவாகரத்து கேட்டது அப்பொழுது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த வயதில் மனைவிக்கு துரோகம் செய்தாரா கோவிந்தா என்று பேசினார்கள். இந்நிலையில் லாக் அப் 2 நிகழ்ச்சியில் அப்படி பேசவே, பேசாமல் விவாகரத்து வாங்கிவிட்டு போய்விடலாம் சுனிதாஜி. ஒரு முறை ஏமாற்றியவர் அடுத்த முறை ஏமாற்ற மாட்டார் என என்ன நிச்சயம் என்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.
என்ன பிரச்சனை?: சுனிதா நீதிமன்றம் சென்றபோது அது குறித்து கோவிந்தாவின் நண்பர் ஒருவரிடம் கேட்டதற்கு, எல்லா வீட்டிலும் இருக்கும் பிரச்சனை தான் கோவிந்தா வீட்டிலும். கணவன், மனைவி என்று இருந்தால் பிரச்சனை வரத் தான் செய்யும். அதே சாதாரண பிரச்சனை தான் என் நண்பனுக்கும். மற்றபடி எதுவும் கிடையாது என்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவிந்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த தகவலை தன்னிடம் யாரும் சொல்லவில்லை என்றும், டிவியில் செய்தி பார்த்து தான் தெரிந்து கொண்டதாகவும் சுனிதா தெரிவிக்க அப்போ கணவன், மனைவி பிரச்சனை தீரவில்லை என்றார்கள் ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
முன்பு ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தன் கணவர் சக நடிகைகளுடன் கடல போடுவார் என்றும், அவரிடம் இருந்து தப்பித்த ஒரே நடிகை சோனாலி பெந்த்ரே என்றும் தெரிவித்தார் சுனிதா. அய்யோ கோவிந்தாஜி, உங்கள் ரகசியத்தை எல்லாம் மனைவி பப்ளிக்காக சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரை கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லவும் என்று தெரிவித்தனர் ரசிகர்கள்.



