ஹமாஸ் அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்

 

மத்திய காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர் ஹமாம் ஈத் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் தயாரிப்பிற்கு அவரே பொறுப்பாக இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் அமைப்பின் வான்வழிப் படையை மீண்டும் கட்டியெழுப்ப ஈத் சமீபத்தில் முயன்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகளை படிப்படியாக விலக்கிக் கொள்வதையும், ஹமாஸை சரிபார்க்கப்பட்ட முறையில் ஆயுதங்களைக் களையச் செய்வதையும் வலியுறுத்தியது.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பெரும்பாலும் முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.