சின்னத்திரை பிரபலங்களின் பார்ட்டிகளில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறார் நாராயணி சாஸ்திரி.
இந்தி டிவி சீரியல்கள், வெப் தொடர்கள், படங்களில் நடித்து வரும் நாராயணி சாஸ்திரி சித்தார்த் கண்ணனுக்கு அளித்த பேட்டியில் சின்னத்திரையில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து பேசியிருக்கிறார்.
சின்னத்திரை ரொம்பவே மாறிவிட்டது. முன்பு பார்ட்டிகளில் மதுவுக்கு பெரிய தொகையை ஒதுக்கினார்கள். ஆனால் தற்போது சட்டவிரோத போதைப் பொருளுக்காக பணத்தை ஒதுக்குகிறார்கள் எனும் நாராயணி.
போதைப் பொருள் பயன்பாட்டால் நான் பார்ட்டிகளுக்கு செல்வதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது பார்ட்டிகள் என்றால் டான்ஸ் ஆடுவது இல்லை. போதைப் பொருளை தான் பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.
போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. ஆனால் அதை அவர்கள் பயன்படுத்தியபோது பார்த்திருக்கிறேன் எனும் நாராயணி சாஸ்திரி.
டிவி பிரபலங்கள் கொடுக்கும் பார்ட்டிகளில் கொகைன் மற்றும் MDMA அதிகம் பயன்படுத்துகிறார்கள் என கூறுகிறார் நாராயணி. அவர் வெளிப்படையாக தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
நான் எல்லாத்தையும் டிரை செய்து பார்த்திருக்கிறேன். அது எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அப்படி செய்தேன். மற்றபடி எந்த காரணமும் கிடையாது என கூறியிருக்கிறார்.
சீரியல் செட்டில் சட்டவிரோத போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு செய்து கலைஞர்களால் நிற்கக் கூட முடியாத நிலை எல்லாம் ஏற்பட்டிருக்கிறது. ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற நாராயணி.
போதைப் பொருள் எடுத்து போதையில் நடிகர் இருந்ததால் டிவி சீரியல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டதும் உண்டு. இதனால் தயாரிப்பாளர்கள் தான் பாவம் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிவித்த நாராயணி.



