எம்மில் சிலருக்கு நுரையீரல் பகுதியில் உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். வேறு சிலருக்கு எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தின் காரணமாக நுரையீரல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.செய்தி அறிக்கை
இத்தகைய தருணங்களில் உங்களுடைய நுரையீரல் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் இருக்கும் ரத்த கட்டிகளையும், தழும்பு திசுக்களையும் அகற்றுவதற்கு பல்மனரி என்டார்டெரெக்டோமி எனும் நவீன சத்திர சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் கடுமையான சிரமம், சோர்வு ,வயிறு மற்றும் கால் பகுதியில் வீக்கம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உங்களுடைய நுரையீரல் பகுதியில் குருதியோட்டம் தடையாகி, அங்கு உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை மருத்துவ மொழியில் நாட்பட்ட த்ரோம்போ எம்போலிக் பல்மணரி ஹை பிளட்ப்ளஷர் என்றும் குறிப்பிடுவார்கள்.
இத்தகைய தருணத்தில் வைத்திய நிபுணர்கள் நோயாளிகளுக்கு சிக்கலான மற்றும் மற்றும் நீண்ட நேரம் நடைபெறும் பிரத்யேக நவீன சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு நுரையீரல் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் இருக்கும் குருதி ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் ரத்த கட்டிகளையும், திசு பகுதியில் இருக்கும் தழும்புகளை அகற்றுவார்கள். இதனைத் தொடர்ந்து இதயமும், நுரையீரலும் இணைந்து சிறப்பாக இயங்கி நோயாளிக்கு நிவாரணத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.உடற்கூறியல் பயில்
இத்தகைய சத்திர சிகிச்சைக்கு முன்னதாக நோயாளிக்கு பல வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். தோராயமாக பத்து முதல் பதிமூன்று மணி நேரம் வரை இத்தகைய சிக்கலான நுட்பமான சத்திர சிகிச்சை நடைபெறும். இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் உங்களின் குடல் இயக்கத்தை துல்லியமாக அவதானிப்பார்கள்.
மேலும் எக்கோ கார்டியோ கிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் சத்திர சிகிச்சைக்கு பின்னரும் மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து சுவாச பயிற்சிகள்- இயன்முறை சிகிச்சை -ஆகியவை இணைத்து வழங்கி, முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
சிலருக்கு விபத்தில் சிக்கும் போது பலமாக அடிபட்டு நுரையீரல் பகுதியில் ரத்த உறைவு ஏற்பட்டு விடும். இதனால் ஏற்படும் ரத்த கட்டி அங்குள்ள ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி பாரிய அசௌகரியத்தை உண்டாக்குகிறது. சிலருக்கு மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளுடன் தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவையும் ஏற்படக்கூடும்.



