சவுதி அரேபியாவில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் விமான நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. சமீபத்தில் தம்மாம் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் சிலர் காயமடைந்தனர். இதனால் இந்தியா – சவுதி அரேபியா இடையேயான விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
ஆகாசா ஏர் நிறுவனம் ஜெத்தாவுக்கான விமான சேவையை நவம்பர் 18 வரையிலும், ரியாத்துக்கான சேவையை நவம்பர் 30 வரையிலும் ரத்து செய்வதாக நேற்று அறிவித்துள்ளது. முன்னதாக ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் ரியாத், ஜெத்தா மற்றும் தம்மாம் நகர்களுக்கான விமான சேவைகளை நவம்பர் 14 வரை ரத்து செய்திருந்தன.
அதேநேரம், சவுதி அரேபியாவின் ஃப்ளைநாஸ் உள்ளிட்ட உள்ளூர் விமான நிறுவனங்கள் இந்தியாவுக்கு குறிப்பிட்ட அளவில் கட்டுப்பாடுகளுடன் விமானங்களை இயக்கி வருகின்றன.



