ஈரானின் புதிய திட்டம்- போரை முடிவுக்கு கொண்டுவரும்புதிய திட்டம்

 

அமெரிக்காவுடனான 7 மாத கால போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஈரானின் புதிய திட்டத்திற்கு, அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பதில் கிடைத்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுக் கூட்டத்தின்போது, ஈரானிய துறைமுகங்கள் மீதான தடையை நீக்கினால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாக ஈரான் முன்மொழிந்தது.

இத்திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் பதில் ஈரானிய அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ‘‘இரு தரப்பிற்கும் சாதகமான அடிப்படையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிப்போம்’’ என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஈரானிய பொருளாதாரத்தின் மீது புதிய தடைகளை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், ஈரானில் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.