ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள தாராபா மாநிலத்தில் அமைந்துள்ள கரிம்-லாமிடோ உள்ளாட்சி பகுதிக்கு உட்பட்ட பின்னாரி கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், பொதுமக்கள் உட்பட 62 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 52 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.



