மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 27-2026

 

மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் தடுமாறுவீர்கள். தலைவலி, வாயுக்கோளாறு வரலாம். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி கொடுக்க வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

மிதுனம்: கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் வீண் டென்ஷன் நீங்கும்.

கடகம்: துடிப்புடன் காணப்படுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள்.

 

சிம்மம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். குழப்பம் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

கன்னி: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். கொடுத்த கடனை திரும்பப் பெறுவீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பீர். அலுவலகத்தில் மதிப்புயரும்.

துலாம்: பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளவும். செலவுகள் கையை கடிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்று வெல்வீர்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர். தாயார், பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு: குழப்பம் நீங்கி குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

மகரம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர் வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். பணியாட்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார்.

கும்பம்: உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தில் பழுதை சீர் செய்வீர். முன்கோபத்தை குறைப்பது நல்லது. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மீனம்: குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர். தந்தையின் உடல்நிலை சீராக அமையும். சொந்த ஊர் விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். விவசாய நிலம் விற்பனையாகும். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 26-2026
மேஷம்