மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 08 -ஜூலை -2026

 

மேஷம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரர்களுடன் ஒற்றுமை ஏற்படும். மாலை முதல் எச்சரிக்கை அவசியம். வீண் அலைச்சல், காரியத்தடைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். உடன்பிறந்தோரிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

மிதுனம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை எதிர் பாராது சந்திப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். கணவன் – மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகை யால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.

சிம்மம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கன்னி: எந்த காரியத்தைத் தொட்டாலும் பலமுறை முயன்ற பிறகே முடிவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வெளியூர் பயணம் அலைச்சலைத் தரும்.

துலாம்: உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. வீட்டில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் வேகமெடுக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

விருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாய மடைவார்கள். உறவினர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

தனுசு: கடந்தகால இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். ஆன்மிகச் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

மீனம்: பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரரீதியாக புது முயற்சிகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் கூடுதல் கவனம் தேவை.

பராபவ – ஆனி 24 | புதன்கிழமை

திதி: அஷ்டமி நண்பகல் 12.22 வரை, பிறகு நவமி.

நட்சத்திரம்: ரேவதி மாலை 4.00 மணி வரை, பிறகு அசுவினி.

நாமயோகம்: அதிகண்டம் நண்பகல் 12,37 வரை, பிறகு சுகர்மம்.

நாமகரணம்: கௌலவம் நண்பகல்12.22 வரை, பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.

யோகம்: மந்தயோகம் இன்று நாள்முழுவதும்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

சந்திராஷ்டமம்: உத்திரம் மாலை 4.00 மணி வரை, அதன்பிறகு அஸ்தம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.48 மணி.

அஸ்தமனம்: மாலை 6.39 மணி.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 5.

பரிகாரம்: பால்.

தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை