மூடப்பட்டிருந்த ஈரான் – பாகிஸ்தான் எல்லை மீண்டும் திறப்பு

 

ஒருவாரமாக மூடப்பட்டிருந்த ஈரானுடனான எல்லையை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது. இதனால் வணிகர்களும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாகிஸ்தான் தனது சமையல் எரிவாயு தேவையை பெரும்பாலும் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. குறிப்பாக ஈரானில் இருந்து நாள்தோறும் சுமார் 7,000 மெட்ரிக் டன் எல்பிஜியை இறக்குமதி செய்கிறது.சமூக உதவி செய்

இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவாதர் மாவட்டத்தில் பாகிஸ்தான், ஈரான் இடையிலான காப்ட் – ரிம்தான் மற்றும் டஃப்தான் ஆகிய எல்லை சோதனை சாவடிகளை பாகிஸ்தான் அரசு கடந்த 17ம் தேதி மூடியது. இதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை பாகிஸ்தான் வௌியிடவில்லை என்றாலும், பாதுகாப்பு மற்றும் கடத்தல்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வௌியாகின.

இந்த தகவலை குவாதர் வர்த்தக சங்க தலைவர் மிர் நவீத் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த முடிவை வரவேற்றுள்ள மிர் நவீத் ஜான் கல்மதி, “எல்லை தாண்டிய வர்த்தகம், போக்குவரத்து மீண்டும் தொடங்கியிருப்பது இருபுறமும் சிக்கி தவித்த வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும் நிவாரணம் அளித்துள்ளது. நாடு தழுவிய எல்பிஜி பற்றாக்குறையை தணித்து, எரிசக்தி மற்றும் உணவு பொருள்களின் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.