மேஷம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் பங்கு தாரரின் ஆதரவு கிடைக்கும். புது முதலீடு செய்வீர். அலுவலகத்தில் திருப்திகரமான சூழல் உருவாகும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
ரிஷபம்: அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
மிதுனம்: தடைபட்ட பணிகளை முடிப்பீர். பணப் புழக்கம் அதிகரிக்கும். பூர்வீக வீடு, மனை ஆகியவற்றை விற்க முயற்சிப்பீர். உடன்பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்: முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர் களுடன் வாக்குவாதம் வந்து போகும். அக்கம் பக்கத்தினர் தக்க சமயத்தில் உதவி புரிவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க போராடுவீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
சிம்மம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பேச்சில் கவனம் தேவை. பணவரவு திருப்தி தருவதாக அமையும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாவர்.
கன்னி: குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மற்றவர்களை நம்பி சில வேலைகளை ஒப்படைத்தும் பயனில்லாமல் போனதால் நீங்களே முடிப்பீர்கள். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
துலாம்: பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு உண்டு. கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
விருச்சிகம்: பணவரவு திருப்தி தரும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்த உறவினர், நண்பர்களின் மனம் மாறும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். சக ஊழியர்கள் மதிப்பர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபமுண்டு.
தனுசு: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். மனைவி, தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சிலருக்கு புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் பணிச் சுமை இருக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
மகரம்: எதிர்பார்த்து காத்திருந்த பணம் வந்து சேரும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். தாய்வழி உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர். பிள்ளைகளால் நிம்மதியுண்டு.வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
கும்பம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். தாயாரின் மருத்துவ செலவு குறையும். பூர்வீக வீட்டை விற்பதற்கு முயற்சிப்பீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர். அலுவலகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
ஆடி 27 | புதன்கிழமை
திதி: அமாவாசை இரவு 11.07 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: பூசம் காலை 7.59 வரை. பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: வியதீபாதம் பிற்பகல் 3.25 வரை. பிறகு வரீயான்.
நாமகரணம்: சதுஷ்பாதம் நண்பகல் 12.28 வரை. பிறகு நாகவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: பூராடம் காலை 7.59 வரை. பிறகு உத்திராடம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56.
அஸ்தமனம்: மாலை 6.31.
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 3
பரிகாரம்: பால்



