விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க மகப்பேறு தரும் கோயில்கள்!

 

 

*உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் என்பது, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள உறையூர் எனும் பகுதியில் இருக்கும் சிவாலயமாகும். இந்த சிவாலயத்தின் மூலவர் “தான்தோன்றீஸ்வரர்’’ என்றும், அம்பிகை “குங்குமவல்லி’’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோயில், குங்குமவல்லி தாயார் கோயில் என்றும் அறியப்படுகிறது. இங்கு ஆடிப்பூரம் மற்றும் தைமாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய 2 தினங்களில், மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது.கோயில் கண்டறி

விழாவின் முதல் நாளில், கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பர். அதேபோல், இரண்டாம் நாள் திருமணமான பெண்கள், மகப்பேறு வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவர். விழாவின் மூன்றாம் நாளில், திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களின் திருமண தடை – ஜாதக தோஷம் நீங்கி நல்ல வரன் கிடைக்க, வளையல்களைக் காணிக்கையாக தருவர். வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் அம்பிகை வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும். திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தமாகும்.

*சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது, “கண்ணனூர் மாரியம்மன்’’ கோயில். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், அம்பாள் முன்பு தொட்டில் கட்டி, அதில் கோயில் முன்புள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளிக்கின்றனர். இப்படி நீர் தெளித்து தொட்டிலை ஆட்டி வழிபட்டால், நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு வேண்டுதல் வைத்து குழந்தை வரம் பெற்ற பெண்கள், பூக்குழி இறங்கி தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.சமூக உதவி செய்

அப்படி செய்ய இயலாதவர்கள் இப்படி பூக்குழி இறங்கும் நேரத்தில், அம்மனுக்கு அபிஷேகம் செய்த பாலை, அக்னி குண்டத்தில் நின்று கொண்டே குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இப்படி செய்வதால் அந்த குழந்தைகள் நோய் நொடியில்லாமல், நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள். அம்பாள் எப்போதும் அவர்களுக்கு துணை நிற்பாள் என்பதும், கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் திரளும் பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.

*ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், நாகலாபுரம் – பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் “வாலீஸ்வரர் கோயில்’’ அமைந்திருக்கிறது. இங்கு வாலீஸ்வரர் சந்நதியைவிட, காலபைரவரின் சந்நதியே பெரிதாக உள்ளது. நின்ற கோலத்தில் காலபைரவர் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே அவருடைய வாகனமான நாயின் உருவம் பெரிய அளவில் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் காலபைரவர் சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கே வந்து பைரவரை வித்தியாசமாக வேண்டிக் கொள்கிறார்கள்.கலாச்சாரம் காண்

குழந்தை இல்லாத தம்பதிகள் இங்குள்ள புனித குளத்தில் நீராடி, காலபைரவரை வணங்கி, அங்கு கல் வடிவில் இருக்கும் நாய் குட்டியை எடுத்துக் கொண்டு, அங்கிருக்கும் நாய் வாகனத்தை மூன்று முறை சுற்றி வந்து பொம்மையை கீழே வைத்து விட்டு கால பைரவரை பிரார்த்தனை செய்தால், மக்கட்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையோடு பைரவரை வணங்கி, பிறகு பைர வரின் வாகனமான நாய் உருவத்தை விலையாகக் கொடுக்கும் நம்பிக்கை உள்ளது. அதன் பிறகு, மீண்டும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள். இங்கே சிவபெருமானுக்கு முன்பாக, நந்திக்கு பதில் ஆஞ்சநேயர் இருப்பதால்தான் பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை. கருவிலுள்ள குழந்தைகளுக்கு இலை போடும் கோயில்:

*திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அருகன்குளம் என்னும் இடத்தில், தர்மபதி என்றழைக்கப்படும் “ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள்’’ கோயில் அமைந்துள்ளது. இங்கு, பக்தர்கோயில் கண்டறி

களிடம் பெறப்படும் அரிசியை கொண்டு, அன்னதானம் நடக்கும். இதில் கர்ப்பிணிப் பெண்களும் கலந்து கொள்வர். அப்போது அவருக்கு சாப்பிட இலை போடும் போது, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் உள்ள கருவுக்குகூட தனி இலை போடப்படும். இதனை ‘‘இடை இலை” என்கிறார்கள். இது ஆரோக்கியமான பிரசவத்திற்கு உதவும் என்பது நம்பிக்கை.

*சீர்காழி சட்டநாதர் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று, ஞானப்பால் வழங்கிய நிகழ்வு திருமுலைப்பால் விழாவாக லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வெகுவிமரிசையாக 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. நிவேதித்த பாலை பக்தர்கள் உண்டு மறுமுலைப்பாலுண்ட பேறு பெறுகின்றனர். இந்தப் பாலை வாங்கிக் குடிக்கும் கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள், ஞானக்குழந்தையாகவும், அறிவாற்றலுடனும், உலகம் போற்றுபவராகவும், கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.கர்ப்பகால நலம் பேணு

*புதுக்கோட்டை – காரையூர் சாலையில், சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது “குமரமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி’’ திருக்கோயில். கொள்ளையழகுடன் காட்சி தரும் முருகப் பெருமானின் இக்கோயிலில், குழந்தை பாக்கியத்திற்காக, வாத நோய் நீங்குவதற்காக, கணவன் மனைவி ஒற்றுமைக்காக என எல்லாவற்றுக்கும் விசேஷமாக பிரார்த்தனை செய்து வழிபடுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், தங்கள் வளைகாப்பு தினத்தன்று இங்கே வந்து இங்குள்ள வேலுக்கு வளையல்களை அணிவித்து சுகப் பிரசவத்திற்காக பிரார்த்தனை செய்வது, இந்தத் தலத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

*கும்பகோணம் – திருவையாறு சாலையில், கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது, உமையாள்புரம். இங்கு “காசி விசுவநாதர்’’ ஆலயத்தில், வைகாசி விசாகம் அன்று காசி விஸ்வநாதர் மற்றும் குங்கும சுந்தரி அம்பாளுக்கும் இடையே திருக்கல்யாண வைபவம் நடக்கும். அதே ஊரிலுள்ள பெருமாள், இங்கு வந்து கன்னிகா தானம் செய்து கொடுப்பார். அன்றைய தினம், திருமணபேறு வேண்டுவோர், இங்கு வந்து பிரார்தித்து அடுத்து வரும் வைகாசி விசாகத்திற்குள் வேண்டுதல் நிறைவேறியவர்கள், கல்யாண வைபவத்திற்கு தாலி, புடவை, சீர் பட்சணங்கள் செய்து கொடுத்து, தங்களது நன்றியை செலுத்துகிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்க, வளைகாப்பு வைபவம் செய்து பரிகாரம் செய்கிறார்கள்.ஆன்மீகம் பார்

*திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு அருகே உள்ளது கோட்டைப்பட்டி. இங்கு மலை மீது அருள்பாலிக்கிறார் “சென்றாயப் பெருமாள்’’. இவரை தரிசித்தால் குழந்தை வரம் கிடைக்கும். பெருமாள், காண்பதற்கு சிறுவனாகவும், தாடி மீசையுடனும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். திருப்பதிப் பெருமாளை போலவே இவருக்கு அலங்காரம்

செய்கிறார்கள்.

*இளநகர் உடையீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இங்குள்ள லிங்கம் செம்மண்ணால் ஆனது. இருப்பினும், அபிஷேகம் செய்தாலும் கரையாத அற்புதம் நடக்கின்றது. இக்கோயிலின் திருப்பணியின் போது, ஒரு நந்தி கிடைத்தது. அதனை கோயிலில் வைத்து வழிபடத் தொடங்கியுள்ளனர். இறைவியை வழிபட வந்த நிறைமாத கர்ப்பிணி, நந்தி மேல் சாயவே, நந்தி சிறிது சிறிதாக நகர்ந்தது.சமூக உதவி செய்

அவள் தடுமாறி தரையில் சாய்ந்தாள். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது முதல் அந்த நந்தி சுகப்பிரசவ நந்தி என்றழைக்கப்படு கிறது. சுகப்பிரசவம் ஆவதற்கு கர்ப்பிணிப் பெண்கள் இங்குள்ள சுகப்பிரசவ நாயகியை வழிபட்டு சுகப்பிரசவ நந்தி சிலையை சற்று தள்ளி வைத்துவிட்டு செல்கின்றனர். அவர்களுடன் உடன் செல்கிறவர்கள், நந்தியை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வைக்கின்றனர். இப்படி செய்தால், சுகப்பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கை.

*கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழித்தடத்தில், 22 கிமீ தொலைவில் வட குரங்காடுதுறை அமைந்துள்ளது. இங்கு தயாநிதீஸ்வரர் – சடைமுடிநாயகி திருக்கோயில் உள்ளது. வாலி வழிபட்ட தலம் என்றும், கர்ப்பிணி பெண்ணுக்கு இளநீர் கொடுத்து தாகம் தீர்த்த தலம் என்றும் கூறுவர். ஆடுதுறைப் பெருமாள் கோயிலில் இருந்து கணபதி அக்ரஹாரம் செல்லும் வழியில், ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ளது.கோயில் கண்டறி

திருவையாறிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சிவன் கோயில்களில் பஞ்சலோக நடராஜர் விக்கிரகங்களை மட்டுமே காணமுடியும். ஆனால், இங்கே எழுந்தருளி ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற நடராஜப் பெருமான், மூலவராக சிலாரூபமாக கருங்கற்சிலையாக காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மையும், நடராஜரும் மூலவர்களாக இங்கு தரிசனம் தருவது வெகு சிறப்பு. பொதுவாக கர்ப்பிணி பெண்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்ப்பார்கள். ஆனால், இங்கே கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டிக்கொள்ள வருகிறார்கள்.

*பெங்களூரு – மைசூரு சாலையில் 50கி.மீ. தூரத்திலுள்ள சென்னப் பட்டணம் அருகிலுள்ளது தொட்டமளூர். இந்த ஊரில் புகழ் பெற்ற “அப்ரமேய பெருமாள்’’ கோயில் உள்ளது. இந்தக் கோயில் பிரகாரத்தில் தவளும் வடிவிலான கண்ணனின் சந்நதி இருக்கிறது. குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள், “கண்ணா! உன்னைப் போல் எங்களுக்கும் ஒரு பாலகன் பிறக்க வேண்டும்” என இந்தக் குழந்தையிடம் வேண்டிக் கொள்வர். மரத்தால் ஆன தொட்டிலையும் இவரது சந்நதியில் கட்டுவர்.கர்ப்பகால நலம் பேணு

*மயிலாடுதுறை அருகிலுள்ள, வழுவூர் “கஜசம்ஹார மூர்த்தி’’ கோயிலில் முருகப் பெருமானை பார்வதிதேவியின் இடுப்பில் அமர்ந்த கோலத்தில் காணலாம். இந்த காட்சியை வேறு எங்கும் காண முடியாது. மற்ற கோயில்களில், சிவனின் திருவடிகளில் மேல் பாகம் மட்டுமே நமக்கு தெரியும். இங்கு மட்டுமே சிவனின் உள்ளங்காலை தரிசிக்கலாம். இங்கே சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் உள்ளது. எங்கும் இல்லாத தனிச்சிறப்பு. இந்த தீர்த்த நீரை தலையில் தெளித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

*சென்னை மேற்கு மாம்பலத்தையொட்டி அமைந்துள்ள மேட்டுப் பாளையத்தில், கோயில் கொண்டிருக்கிறாள் “ஸ்ரீ முத்தாலம்மன்’’. இந்த ஆலய ஆடிப்பூர நன்னாளில், அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்புத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வார்களாம்! அந்த நாளில், சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் பிரார்த்த னைக்காக வந்து, கை நிறைய வளையல்களை அம்மனுக்கு வாங்கி வருவார்கள். அந்த வளையல்களை அம்மனுக்கு அணிவித்துவிட்டு, அந்த வளையல்களை வேண்டுதலுக்கு வந்த பெண்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.கலாச்சாரம் காண்

பிரசாத வளையலை அணிந்துகொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்; சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம்! பிள்ளை பாக்கியம் வேண்டும் பெண்களுக்கு, முளைப் பயறுப் பிரசாதம் வழங்குகின்றனர். இந்த முளைகட்டிய பயறு பிரசாதத்தை, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் பக்தர்கள் பெற்று அனுப்பி வைப்பது குறிப்பிடத்தக்கது.