ஜலசந்தியில் 2 கப்பல் மீது டிரோன் தாக்குதல்: 2 மாலுமிகள் மாயம்

 

ஈரான் ஆதரவு படைகளுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் ஏமன் தலைநகர் சனாவின் ஹம்தான் மற்றும் தவுரா மாவட்டங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதி படைகள் தெரிவித்துள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை நோக்கி ஹவுதிகள் தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி வரும் சூழலில் நடந்த இந்த தாக்குதல்களுக்கு சவுதி அரேபியாவே காரணம் என்றும் ஹவுதிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இது குறித்து சவுதி அரேபியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.இந்திய நிகழ்வுகள்

இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் எம்டி பெட்ரோ டால்பின் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 இந்திய மாலுமிகள் இருந்த நிலையில் இரண்டு இந்திய மாலுமிகள் மாயமாகினர். இதேபோல் மார்ஷல் தீவின் கொடியுடன் சென்ற எம்டி வல்தேரா என்ற மற்றொரு டேங்கர் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதனால் அந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அந்த கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.