அமெரிக்காவில் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், தனது அரசியல் கொள்கைகளை பரப்புவதற்கும், உலக மயமாக்கலுக்கு எதிராகவும் தொலைக்காட்சிகளில் தொடர் விளம்பரங்களை வௌியிட்டு வருகிறது. அமெரிக்க அரசாங்கத்தின் மில்லியன் கணக்கான டாலர் வரி பணத்தை பயன்படுத்தி இந்த விளம்பரங்கள் வௌியிடப்பட்டு வந்தன.அரசியல் செய்திகள்
இந்த விளம்பரங்களுக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி ஜெனிஃபர் ரோஷன், “மக்களின் வரி பணத்தில் கிடைக்கும் அரசாங்க நிதியை பயன்படுத்தி விளம்பரங்கள் வௌியிடுவது சட்டவிரோதம்” என கூறியதுடன், உடனே அனைத்து விளம்பரங்களையும் நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், ஞாயிற்றுகிழமை(நேற்று முன்தினம்) இரவு ஔிபரப்பாக இருந்த விளம்பரங்கள் உள்பட மீதமுள்ள அனைத்து விளம்பரங்களையும் ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த உத்தரவு டிரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.



