மஹாளய பட்சம் 27.9.2026 ஞாயிற்றுக்கிழமை 10.10.2026 அமாவாசை வரை நடைபெறும். மஹாளயம் என்றால் “பெரிய கூட்டம்” என்று பொருள். இந்த 15 நாட்களில் நமது பித்ருக்கள் அதாவது மறைந்த முன்னோர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நமது இல்லங்களுக்கு எழுந்தருளு வதாக ஐதீகம். இந்த 15 நாட்களும் முன்னோர்களுக்கு எள், தண்ணீர் இறைத்து தர்ப்பணம் செய்வது மகா புண்ணியத்தைத் தரும். மஹாளய அமாவாசை அன்றாவது தங்களால் இயன்ற அன்னதானத்தை ஏழைகளுக்கு வழங்குவது பித்ருக்களின் ஆசியை முழுமையாகப் பெற்றுத் தரும்.
மஹாளயம் என்ன சிறப்பு?
ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பிதுர் உலகம் சென்ற முன்னோர்கள் நம்மைத் தேடி வந்து நம்முடைய வழிபாட்டினை ஏற்றுக் கொள்கிறார்கள். மஹாளயபட்சம் 15 தினங்களிலும் கூட்டமாக அவர்கள் இங்கே வருவதால் மஹாளய அமாவாசை சிறப்பு பெறுகிறது.
மேலும் உள்ள
தேனி வீரபாண்டி அருகே அரசு பேருந்து, டிராக்டர், கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: இளம்பெண் உயிரிழப்பு!’
விமானி ஸ்மிட் மச்சாருக்கு ஜனாதிபதி விருது: நயினார் நாகேந்திரன் வாழ்த்து’
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!’
அறவழி போராட்டங்களை ஒடுக்கும் ஜனநாயக அத்துமீறல் ஏற்புடையதல்ல! – தவெக அரசுக்கு எஸ்டிபிஐ கண்டனம்’
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தைத் தடுக்க இதுவரை 1,000 பேர் கைது’
முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக கூடி வரும் அமாவாசை என்பதால் இது மஹாளய அமாவாசை என்று சொல்லப்படுகிறது. நவராத்திரியின் துவக்கத்தைக் குறிக்கும் அமாவாசை தினம் மஹாளய அமாவாசை.
நம் வாழ்க்கையில் வழிவழியாக வந்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாட்களாக இன்று விளங்குகிறது.
மூன்று அமாவாசை முக்கியம்
மாத அமாவாசை, குல முன்னோர்களுக்கான வழிபாடு என்றாலும், மூன்று அமாவாசை முக்கியமானது. உத்தராயண காலத்தின் துவக்கத்தில் வருகின்ற தை அமாவாசையும் தட்சிணாயண காலத்தின் துவக்கமாக வரும் ஆடி அமாவாசையும் மிக முக்கியமானது.அந்த அமாவாசையில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்களும், செய்தவர்களும், தொடர்ந்து 15 நாட்கள் முன்னோர்கள் வழிபாட்டை இயற்றுவதற்கானது தான் மஹாளயபட்சம். ‘‘மறந்தவர்க்கு மஹாளயம்’’ என்று ஒரு வழக்கு மொழி உண்டு.
ஏதோ ஒரு காரணத்தினால் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்ய முடியாமல் போய் விட்டவர்களும், ஞாபக மறதியால் மறந்து விட்டவர்களும் மஹாளயபட்சத்தில், குழுவாக வரும் முன்னோர்களுக்கு, நீரும் சோறும் தந்து, பசியையும் தாகத்தையும் தீர்ப்பதன் மூலம் நல் வாழ்வு பெறலாம்.
ஆடி முதல் தை வரை
பிதுர்கள் எனப்படும் முன்னோர் ஆடி அமாவாசைக்கு வந்து, மஹாளய அமாவாசை காலத்தில் இங்கே தங்கி, தை அமாவாசை முடிந்து பூலோகத்திலிருந்து தங்கள் பிதுர் லோகத்திற்கு திரும்பப் புறப்படுகிறார்கள்.
நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும், நம்முடைய குடும்பங்களில் உள்ள தோஷத்தை நீக்குவதற்காகவும், தங்கள் சக்தியை பயன் படுத்தி நமக்கு நல்லாசிகள் வழங்குவதற்காகவும், நம்மைத் தேடி வருகிறார்கள். மஹாளயபட்சம் முன் உள்ள நாட்கள் அவர்கள் வருகை நாட்கள்.
மஹாளயத்துக்கு பின் உள்ள நாட்கள் நம்மிடமிருந்து விடைபெற்றுத் திரும்பச் செல்லும் நாட்கள். அப்படிச் செல்லும் அவர்கள் வழிக்கு வெளிச்சம் தருவதற்காகவே தீபாவளி, கார்த்திகை முதலிய நாட்களில் நாம் தீபம்
ஏற்றுகிறோம்.
பிதுர் வழிபாடு
இல்லறத்தில் இருப்பவர்களுக்கு, நான்கு கடன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தேவ கடன், ரிஷி கடன், பூத கடன், பிதுர் கடன். இல்லறத்தான் முக்கியக் கடமையாகப் பித்ருக்களை உபசரிக்கக் கூடிய சடங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம். அதனால்தான் திருவள்ளுவர் முதல் வழிபாடாக தென்புலத்தார் வழிபாட்டை வைத்தார். அது மிகுந்த சிரத்தையுடனும், கவனத்தோடும் செய்யப்பட வேண்டும் என்பதால்தான் அந்த வழிபாட்டுக்கு சிரார்த்தம் என்று பெயர் வைத்தார்கள்.
முன்னோர்கள் சாபம் கொடுப்பார்களா?
எந்தக் கடனை அடைத்தாலும் அடைக்காவிட்டாலும் நீத்தார் கடனை அடைக்காமல் விடக் கூடாது. நீங்கள் ஒரு கோரிக்கைக்காக குலதெய்வத்தை நாடியோ, இஷ்ட தெய்வத்தை நாடியோ சென்றால், உங்கள் கோரிக்கை பலிப் பதும் பலிக்காமல் இருப்பதும், நீங்கள் நீத்தார் கடனை நிறைவேற்றுகிறீர்களா இல்லையா என்பதைப் பொறுத்ததுதான். நீத்தார் கடனை நிறைவேற்றாமல் நீங்கள் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் அணுக முடியாது. தாத்தாவுக்கு தாத்தா, தாத்தா, அப்பா என்று வரிசையாக வரும் சங்கிலித் தொடரில் இவ்வுலகில் வந்து வாழ்ந்து, அடுத்த சந்ததியை ஏற்படுத்திவிட்டு சென்றவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடப்பாடு தான் மஹாளய வழிபாடு.
எனவே எதை மறந்தாலும் இதை மட்டும் மறக்கக்கூடாது. தெய்வ வழிபாட்டை மறந்துவிட்டால் கூட பிராயச்சித்தம் உண்டு. ஆனால் நீத்தார் வழிபாட்டை மறந்தால் பிராயச் சித்தம் செய்வது கடினம். அது குடும்பத்தில் பலவிதமான தொல்லைகளை உருவாக்கும். அது அவர்கள் கொடுக்கும் சாபத்தினால் அல்ல. அவர்களை மறந்ததால் வந்த விளைவு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பித்ருபூஜை வீணாவதில்லை
முன்னோர்கள் சிலர் வேறு பிறப்பு பிறந்திருக்கலாம். அல்லது முக்தி அடைந்து இருக்கலாம். மறுபிறவிகள் எடுத்தாலும், முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருந்தாலும் பித்ரு பூஜைகள் ஏதோ ஒரு வகையில், பித்ரு தேவதைகளின் மூலம், அவர்களைச் சென்றடைகின்றன. மறுபிறவி பெற்ற பின்னும் அது அவர்களுக்குப் பயன்படுகிறது. அது மட்டுமல்ல, அவர்களை நினைத்துச் செய்யும் நன்றி உணர்வால், நமக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நமது முன்னோர்களில் யார் யார் பிறவா நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என ஆன்றோர்கள், ரிஷிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள். நாம் செய்யும் பித்ரு பூஜை வீணாவதில்லை.
யார் யார் செய்ய வேண்டும்?
* தாய்/தந்தை இல்லாத ஆண்கள் அவசியம் செய்ய வேண்டும்.
* குழந்தை இல்லாத, அதே சமயத்தில் கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். சங்க காலத்தில் பெண்கள் செய்த நீத்தார் வழிபாடு பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன.
* திருமணம் ஆன பின், தன்னுடைய தாய் தந்தையர் மறைந்து விட்டால், அவர்களை பெண் வணங்கலாம். ஆனால் அமாவாசை விரதம் இருப்பதற்கும் தர்ப்பணம் செய்வதற்கும் விதிக்கப்படவில்லை
=என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
* பெண்கள் முறையான விரதம் இல்லாமல் (தர்ப்பணம் செய்யாமல்) கோயிலுக்குச் சென்று தானம் செய்யலாம். வீட்டில் பெரியவர்களை அழைத்து அன்னமிட்டு மரியாதை செய்யலாம். பொதுவாக தில (எள்) தர்ப்பணமும் சிராத்தமும் ஆண் வாரிசுகள் செய்ய வேண்டும் என்றே சாஸ்திரம் சொல்கிறது.
அமாவாசையும் மகாபாரதமும்
மஹாளய அமாவாசைக்கும் மகாபாரதத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த அமாவாசை வருவதற்கு காரணங்கள் சாஸ்திரத்தில் நிறைய இருந்தாலும் செவி வழிக்கதையாக கர்ணன் கதையோடு இணைத்துச் சொல்லப்படுகிறது. மகாபாரதத்தில், குருசேத்திரப் போரில் கர்ணன் இறந்துவிட்டான். வாழும் போது பலருக்கும் அள்ளி அள்ளித் தந்த கர்ணன் தென்திசை உலகமான எமலோகத்திற்குச் சென்றான். ஆனால், அவன் சாப்பிட அமர்ந்தபோது அவனுடைய தங்கத்தட்டில், உணவுக்குப் பதிலாக வெள்ளிக்காசுகள், தங்கக்காசுகள் இருந்தன. (எதைத் தருகிறோமோ அது திரும்ப கிடைக்கும்.) வெள்ளிக்காசுகள் வைத்து பசியாற முடியுமா? ஏன் எனக்கு அன்னம் தரவில்லை என்று கர்ணன் கேட்ட போது, “நீ உன்னுடைய முன்னோர்களுக்கான வழிபாட்டைச் செய்யவில்லை” என்றான் யமன். உடனே காலதேவன் அனுமதியுடன் கர்ணன் பூமிக்கு வந்து மஹாளயபட்சத்தில் முன்னோர் வழிபாட்டைச் செய்து பித்ருக்கடனை முடித்துக் கொண்டு திரும்பினான். அதன் பிறகு அவனுக்கு ராஜ விருந்து அளிக்கப்பட்டது.
எங்கிருந்து இந்த பூஜைகள் தொடங்குகின்றன?
நம் குடும்பத்தில் தந்தை வழி அல்லது தாய் வழியில் ஒருவர் வாழ்ந்து உயிரை விட்ட பிறகு அவருக்கு நீத்தார் என்று பெயர். நீத்தார் என்பது தான் “பிதுரர்.” நீத்தார் வழிபாடு “பிதுரர் பூஜை”. அவர்கள் உயிர் விட்ட திதி முக்கியமானது. அன்றிலிருந்தே அவர்களுக்கான கடமைகள் தொடங்குகின்றன.
ஒரு வருடத்தில் 96 தடவை சிரார்த்தங்கள் ஹிரண்ய ரூபமாகச் செய்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனை ஷண்ணவதி ஸ்ராத்தங்கள் என்பார்கள். பன்னிரண்டு மாதங்களின் மாதப்பிறப்பு – 12, அமாவாசை – 12, அஷ்டகை -12, வ்யதீபாதம் – 13, வைத்ருதி – 13, மன்வாதி – 14, யுகாதி – 4, மஹாளயம் – 16.
இத்தனையும் முடியாவிட்டால்?
இத்தனை நாட்களையும் முறையாக அனுஷ்டிக்க முடியாதவர்களுக்கு 12 அமாவாசை தினங்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை, அவர்கள் இறந்த மாதத்தில், இறந்த திதியில் சிரார்த்தம் அனுஷ்டிக்க வேண்டும். இதுதவிர, ஆண்டுக்கு ஒரு பருவம், அதாவது புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமையில் ஆரம்பித்து, அமாவாசை வரை (மஹாளய அமாவாசை), முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தி நீர்க்கடன் செய்யவேண்டிய தினங்களாக அனுஷ்டிக்க வேண்டும்.
மஹாளயம் முழுதும் 15 தினங்களும் வழிபாடு செய்வது சிறப்பானது. இதற்குச் சக்தியோ, நேரமோ இல்லாவிட்டால், பஞ்சமி முதலோ அல்லது அஷ்டமி, தசமி முதற் கொண்டு அமாவாசை வரையில் செய்யலாம். இதற்கும் சக்தி இல்லாதவன் 15 நாட்களில் விலக்க முடியாத ஒரு நாளில் செய்யலாம்.
தர்ப்பணம்
பொதுவாக மூன்று முறைகளில் முன்னோரை வழிபடலாம். ஒன்று எள்ளும் தண்ணீரும் விட்டுத் தர்ப்பணம் கொடுப்பது. மற்றொன்று ஹிரண்ய சிரார்த்தம், அதாவது நாம் முன்னோராகப் பாவிக்கும் ஒருவருக்கு பாத பூஜை செய்து தட்சிணை கொடுப்பது. மூன்றாவது ஹோமங்கள் செய்வது அன்ன சிரார்த்தம். இவை மூன்றுமே சிறப்பானவை என்றாலும், குறைந்தபட்சம் எளிமையாக முன்னோர்கள் பெயர் சொல்லி, தர்ப்பணமாவது செய்ய வேண்டியது அவசியம்.
எந்த நாளுக்கு என்ன பலன்?
மஹாளய சிரார்த்த வழிபாட்டில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
*முதல் நாள் – பிரதமை: பணம் சேரும்.
*இரண்டாம் நாள் – துவிதியை: நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.
*மூன்றாம் நாள் – திருதியை: நினைத்தது நிறைவேறும்.
*நான்காம் நாள் – சதுர்த்தி: சத்ரு பயம் நீங்கும்.
*ஐந்தாம் நாள்- பஞ்சமி: செல்வம் சேரும்.
*ஆறாம் நாள் -சஷ்டி: புகழும் கீர்த்தியும் உண்டாகும்.
*ஏழாம் நாள் – சப்தமி: பதவி உயர்வுகளில் தடைகள் நீங்கும்.
*எட்டாம் நாள் – அஷ்டமி: அறிவாற்றல் கிடைக்கும்.
*ஒன்பதாம் நாள்- நவமி: திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
*பத்தாம் நாள் -தசமி: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும், விருப்பங்கள் பூர்த்தியாகும்.
*பதினோராம் நாள் – ஏகாதசி: கலையில் வளர்ச்சி உண்டாகும்.
*பன்னிரண்டாம் நாள் – துவாதசி: ஆடை-ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
*பதின்மூன்றாம் நாள் – திரயோதசி: தீர்க்காயுள், ஆரோக்கியம், நல்ல வேலை – தொழில் அமையும்.
*பதினான்காம் நாள் – சதுர்த்தசி: ஆயுள் விருத்தியாகும். எதிர்கால தலைமுறைக்கு நன்மை கிடைக்கும்.
*பதினைந்தாம் நாள் – மஹாளய அமாவாசை: மேற்சொன்ன அனைத்து பலன்களும் கிடைக்கும்.
காருணீக பித்ருக்கள்
அமாவாசை தர்ப்பணத்தில் இல்லாத சிறப்பு மஹாளய தர்ப்பணத்தில் உண்டு. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைக்கும் இதில் தர்ப்பணம் உண்டு.
அதாவது தந்தை வகையைச் சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம். தாயார் வகையைச் சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் முதலானோர் காருணீக பித்ருக்கள்
எனப்படுவார்கள்.
பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, பிள்ளைகள், அப்பாவுடன் கூட பிறந்த தமக்கை, தங்கைகள், மாப்பிள்ளைகள், அக்கா, தங்கைகள், மனைவி, மாமனார், மைத்துனன், குரு, ஆச்சாரியன், காப்பாற்றிய யஜமானன், நண்பர்கள் கோத்திரம், பெயர் சொல்லி “வர்கத்துவயா வசிஷ்டான் ஸர்வான் காருண்ய பித்ரூன் ஸ்வதா நமஸ்- தர்பயாமி’’ என்ற மந்திரம் சொல்லி தர்ப்பணம்
செய்யலாம்.
வீட்டு வாசலில் நிற்கும் முன்னோர்கள்
மஹாளயத்திலும் அமாவாசையிலும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நிற்கிறார்கள். தங்களுக்குத் தரப்படும் தர்ப்பணத்தை (எள் கலந்த தண்ணீரை) பெற்றுக் கொண்டு நல்லாசி வழங்குகிறார்கள். அன்றைய தினம் வீட்டில் தர்ப் பணம் செய்து அவர்களுக்கான வழிபாடு இல்லை எனில் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள்.
மஹாளயபட்சத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் பித்ரு சிரார்த்தமானது, கயா சிரார்த்தத்திற்கு சமமான பலன் என்றும், மஹா பரணியை 5 மடங்கு பலன் அதிகமாகவும், வ்யதீபாதம் 10 பங்கு அதிகமாகவும் மத்யாஷ்டமி 20 மடங்கு அதிகமாகவும், துவாதசி புண்ய காலத்தை 100 மடங்கு அதிகமாகவும் மஹாளய அமாவாசையை 1000 மடங்கு அதிகமாகவும் புண்ணியத்தை கொடுக்கக் கூடியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஏதோ ஒரு காரணத்தினால், மஹாளயபட்சத்தில், மஹாளய சிரார்த்தம் (நீத்தார் கடன்) செய்ய முடியாவிடில், பிறகு அடுத்த பஞ்சமிக்குள் செய்வதாய் இருந்தால், பிரதமை, ஷஷ்டி, ஏகாதசி, சதுர்த்தசி, வெள்ளிக்கிழமை கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீர்க் கடன் செய்ய வேண்டும்
நீத்தார் வழிபாடு என்பது நம் குருதியோடு கலந்தது. ஒரு காலத்தில் அரசர்கள் ஒரே ஒரு பிள்ளை மட்டும் இருந்தால் அவன் தனது சந்ததிகளுக்கு நீத்தார் கடன் செய்ய வேண்டும் என்பதற்காகவே போரில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நம்முடைய தமிழக கிராம மக்கள், அன்று காலை விரத மிருந்து, அமாவாசை படையல் போட்டு, அதற்குப் பிறகு உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் இதிலிருந்து அவர்கள் விலகுவதில்லை. எனவே, ‘‘நீத்தார் கடன்’’ ஆற்ற வேண்டிய பெருமை யைப் புரிந்துகொண்டு, நம் முன்னோர்களுக்கு, வருகின்ற மஹாளய பட்சத்தில் ஒவ்வொருவரும் நீர்க் கடன் செய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசியல்



