நைஜீரியாவில் 25 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

 

நைஜீரியாவில் 25 பயணிகளுடன் சென்ற விமானம் நேற்று விபத்துக்குள்ளானது. நைஜீரியா விமான படைக்கு சொந்தமான ஏடிஆர்-42 என்ற ராணுவ விமானம் நேற்று எடோ மாநிலம் பெனின் நகரில் இருந்து லாகோஸ் என்ற இடத்துக்கு புறப்பட்டு சென்றது. இதில் 25 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் உள்பட 32 பேர் பயணித்தனர்.

இந்த விமானம் ஒன்டோ மாநிலத்தில் உள்ள இக்போகோடா என்ற பகுதியில் கடற்படை தளம் அருகே பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமானத்தை தேடும் மற்றும் பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டதா என்ற தகவல்கள் வௌியாகவில்லை.