
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 நாட்கள் விசா இல்லாத அனுமதியை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரத்து செய்வதாக மலேசிய அரசு அறிவித்து உள்ளது. எனவே 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் மலேசியா செல்லும் இந்தியர்கள் பயணத்திற்கு முன்பே முறையான விசா பெற்றிருக்க வேண்டும். 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் மலேசியா செல்லும் இந்தியர்கள் ‘மை விசா’ (My VISA) வெப்சைட் வழியாக முன்கூட்டியே விசா பெறுவது கட்டாயமாகி உள்ளது.
அதே நேரம் 2026 டிசம்பர் 31 வரை மலேசியா செல்பவர்கள் வழக்கம் போல விசா இல்லாமல் 30 நாட்கள் தங்கும் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள மலேசிய அதிகாரிகள் பயணிகளின் வசதிக்காக, 2026 டிசம்பர் 1 முதல் அதிகாரப்பூர்வ MyVISA இணையதளம் வழியாக விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என கூறி உள்ளனர். விசா விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும் அல்லது பயணத் திட்டங்கள் மாறினாலும் செலுத்தப்பட்ட விசா செயலாக்கக் கட்டணம் (Processing fee) திருப்பித் தரப்படாது என்றும் குறிப்பிட்டு உள்ளனர்



