மேஷ ராசி அன்பர்களே! இன்று சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். வீடு வாங்கும் யோகம் ஏற்படும். வாகனம் வாங்கும் ஆசை மேலோங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணம் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்த சிரமங்கள் குறையும். வியாபாரம் சிறப்பாக நடக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: செயல்பாடுகளில் வேகத்தை அதிகப்படுத்தி நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும் இன்று உங்கள் பலவீனம்: வேலை காரணமாக அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வு அடையும். அரசாங்க பலன் குறித்த செய்தி தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். 2 மற்றவரிடம் குடும்ப விஷயங்களை சொல்ல கூடாது. 3 இடமாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! தயக்கங்கள் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். விற்பனையில் இருந்து வந்த தடைகள் குறையும். தொழில் போட்டிகள் மறையும். வருமானம் அதிகரிக்கும். யோக பலன்கள் கிடைக்கும். குல தெய்வத்தின் அருள் சித்திக்கும். தேக ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும். கையில் தாராளமாக பணம் புரளும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சிறுசேமிப்பின் மூலம் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்பு அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளிநாடு செல்வார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரிய சித்தி உண்டாகும். இன்று உங்கள் பலம்: உத்தியோகம் பார்க்கும் இடத்தில் ஆதரவான சூழ்நிலை அமையும். வியாபாரத்துக்கு தேவையான புதிய உறவுகள் உண்டாகும். இன்று உங்கள் பலவீனம்: உடனே முடிய வேண்டிய காரியங்களில் இழு பறி நிலை நீடிக்கும். சீட்டு கட்டிய பணம் வந்து சேர தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்கள் கூற வேண்டும். 2 திட்டம் போட்டு பயணங்கள் மேற்கொள்ள வேண்டும். 3 செலவுகள் செய்யும் போது தேவைதானா என்று சிந்திக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! வருமானம் அதிகரித்து நிம்மதி பிறக்கும் நாள். வேலை இடத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். நுட்பமாக வேலை செய்வதால் மேல் அதிகாரி பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் மூலம் வருமானம் பெருகும். உங்களைத் தேடி சில நல்ல வாய்ப்புகள் வரும். மேற்கு திசையில் இருந்து யோகமான செய்தி கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து ஒரு நண்பர் உங்களுக்கு உதவ தயாராக இருப்பார். வெளியூர் பயணங்கள் நல்ல பலனை கொண்டு வரும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவி உயர்வு அடைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலமான பலன் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வியாபாரத்தை அதிகரிப்பது. வியாபாரம் சம்பந்தமான விஷயத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுவது. இன்று உங்கள் பலவீனம்: உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இழுபறியான நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளின் கோபம் பாதிப்பை ஏற்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 புதிய மனை இட வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். 2 வெளியூர் பயணங்களில் விழிப்புடன் நடக்க வேண்டும். 3 வேகத்துடன் விவேகமாகவும் அரசு வேலையில் செயல்பட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். தொழில் துறைகளில் இருந்த போட்டி மறையும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் கருத்துக்கு மதிப்பு கிடைக்கும். பங்காளிகள் வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். வியாபாரத்தில் மிகுந்த லாபம் கிடைக்கும். குடும்ப சூழ்நிலை சரியாகி சந்தோசமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரபலமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலனடைவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை உயர்வு பெறுவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவை அதிகப்படுத்துவார்கள். இன்று உங்கள் பலம்: குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி சந்தோஷம் நிலவும். எதிர்காலம் குறித்து திட்டமிட்டு சேமிக்க தொடங்குவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: சந்தை நிலவரங்களை கருத்தில் கொள்ளாமல் செயல்படுவது. கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் நடப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 முன்கோபமின்றி பொறுமையுடன் நடப்பது நல்லது. 2 வேலை இடத்தில் சக ஊழியரிடம் சண்டை போடக்கூடாது. 3 போட்டி பந்தயங்களில் கவனமாக ஈடுபடுவது நல்லது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! இன்று நன்மைகள் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் துறைகளில் எதிர்பாராத வருமானம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். தந்தையாரின் மனம் கோணாத வகையில் நடப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். உறவினர்களிடம் அன்பாக பழக வேண்டும். வேலை இடத்தில் அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும். யோக பலன் கூடிவரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: சூழ்நிலை அறிந்து செயல்படுகின்ற விதம். காலத்திற்குத் தகுந்த மாதிரி பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்கின்ற நிலை. இன்று உங்கள் பலவீனம்: வாழ்க்கைத் துணையுடன் அனுசரிச்சு போக தவறுவது. இணையம் சார்ந்த விஷயங்களை கையாளும்போது கவனக்குறைவாக இருப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாக்குறுதிகளை கொடுக்கும் போது நிதானம் தேவை. 2 உயர் பொறுப்பில் இருப்பவரிடம் உண்மையாக நடப்பது. 3 உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் நாள் இன்று. பங்குச்சந்தை வியாபாரத்தில் நன்மை உண்டாகும். ஆன்லைன் வர்த்தகங்களில் அளவோடு ஈடுபட வேண்டும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் உருவாகி பின்னர் அது தீரும். பணவரவு அதிகம் இருந்தாலும் செலவுகளும் கூடி சிரமப்படுத்தும். முதலாளியின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். அரசு துறையில் மேலதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சற்று பதட்டமாக இருப்பார்கள் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலைச் சுமைக்கு ஆளாவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனச்சுமை அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: எதிர்ப்புகளை மாற்றி எதிரிகளை நண்பராக்குவீர்கள். தன வரவு மூலம் சேமிப்பை அதிகரிப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: எடுத்த காரியம் உடனே நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பது. நல்ல நண்பர்களின் ஆலோசனையை தவிர்ப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது. 2 வரவு செலவுகளை கவனமாக எழுதி வைக்க வேண்டும். 3 வெளியூர் பயணங்களில் பொருட்களை பத்திரப்படுத்த வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! அதிகமான யோக பலன் வந்து சேரும் நாள். சாதுரியமாக செயல்பட்டு தொழிலை மேம்படுத்துவீர்கள். திறமைகள் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் மறைந்து போகும். பண வரவு தாராளமாக இருக்கும். கையிருப்பு அதிகரித்து மன நிம்மதி உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ அனுக்கிரகம் கிட்டும். சில செயல்கள் முன்கூட்டியே உங்களுக்கு தெரிய வரும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மை ஏற்படும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலை உயர்வு உண்டாகும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: தொழில் விஷயத்தில் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய சிந்தனை மூலம் வியாபாரம் பலப்படும். இன்று உங்கள் பலவீனம்: அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சற்று பதட்டமாக நடந்து கொள்வது. காரசாரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 சுபகாரிய நிகழ்ச்சிகளில் அலட்சியம் கூடாது. 2 பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மனதை கட்டுப்படுத்த வேண்டும். 3 பாகப்பிரிவினை விஷயத்தில் நிதானம் வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! வெற்றிகள் தேடி வரும் நாள். செல்வ பெருக்கு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தொழிலில் புதிய பாதைகள் தெரியும். வியாபாரத்திற்கு நண்பர்களின் உதவி பக்கபலமாக அமையும். வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டிலிருந்து நண்பரின் உதவி தேடி வரும். பண வரவு தாராளமாக இருக்கும். வங்கி இருப்பு உயரும். தேவையில்லாத செலவுகள் குறையும். வேலை இடத்தில் சிறப்புகள் சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைகள் சிறப்பாக நடக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் வேலை மதிப்பு உயரும். இன்று உங்கள் பலம்: உடன் பிறந்தவருடன் ஏற்பட்ட பிணக்கு முடிவுக்கு வரும். வராமல் இருந்த ஒரு தொகை கைக்கு வந்து சேரும். இன்று உங்கள் பலவீனம்: உத்தியோகிடத்தில் விட்டுக் கொடுத்து போக மாட்டீர்கள். அரசு பணிகள் உடனே நிறைவேற வேண்டும் என்று நினைப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 புதிய தொழில் ஆரம்பிப்பதில் பொறுமை மிக முக்கியம். 2 முக்கிய பிரமுகர்களின் மனம் கோணாமல் நடக்க வேண்டும். 3 சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்துகின்ற திறமை வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! மனநிம்மதி அதிகரிக்கும் நாள். வெளிநாட்டு பயணத்திற்கான ஏற்பாடுகள் தொடரும். புதிய வேலையில் முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அரசு வேலையில் பதவி உயர்வு உண்டாகும். யோக பலன்கள் தானாக வந்து சேரும். வியாபார வெற்றியின் மூலம் தன லாபம் பெருகும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். புனித யாத்திரை செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் தொழில் மேன்மை அடையும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் எண்ணியது நிறைவேறும். இன்று உங்கள் பலம்: மனதளவில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: சட்டென கோபப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசுவது. சிறு பிரச்சினையாக இருந்தாலும் பெரிதாக எண்ணி கவலைப்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இரவு நேர பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். 2 ஆடம்பரமாக செலவு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். 3 மனம் போன போக்கில் நடக்கக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! சிறப்பான காரியங்கள் நடக்கும் நாள். வியாபாரம் சற்று மந்தமாக நடந்தாலும் பின்னர் சூடு பிடிக்கும். தொழிலில் எதிர்பாராத இடையூறு தோன்றி மறையும். கண் திருஷ்டி பாதிப்பால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்க வேண்டும். பங்குச்சந்தை வியாபாரத்தில் எச்சரிக்கையாக ஈடுபட வேண்டும். வீட்டின் தேவைகள் அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும். தன தானிய விருத்தி உண்டாகும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் நல்ல பலனடைவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வேலை மாற்றம் ஏற்படும். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வியாபாரம் சிறப்பாக நடக்கும். இன்று உங்கள் பலம்: ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவது மனதிருப்தி அளிக்கும். எதிலும் விடாப்பிடியாக செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: ஏதோ ஒரு வகையில் கவலை உண்டாகி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில நிகழ்வுகள் சங்கடத்தை உண்டாக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 சீட்டு போடுவது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. 2 தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பார்க்க வேண்டும். 3 வியாபாரத்தில் பிரச்சனை வராமல் பார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். வர்த்தகப் பணிகளில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். வேலையாட்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிக நன்மை உண்டாகும். உறவினரின் ஒத்துழைப்பால் தொழிலில் புதிய முதலீட்டுக்கு திட்டம் வகுக்கப்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உயர் பொறுப்புகளில் இருக்கும் நபர்களால் அனுகூலம் ஏற்படும்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு லாபம் குவியும்.
சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வாகன யோகம் கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கனவுகள் நனவாகும்.
இன்று உங்கள் பலம்:
வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையோடு செயல்படுவீர்கள். உறவினரின் ஒத்துழைப்பு உங்களுக்கு கை கொடுக்கும்.
இன்று உங்கள் பலவீனம்:
நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. யோசிக்காமல் சில காரியத்தில் இறங்கி விடுவது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 வியாபார பணிகளில் நிதானத்தோடு செயல்பட வேண்டும்.
2 வீட்டில் பணம் நகைகளை பத்திரமாக வைக்க வேண்டும்.
3 ஆன்லைன் வர்த்தகங்களில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட எண்: 8,3
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள்.
வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நாள். செல்வச் சேர்க்கைக்கான முயற்சிகள் வெற்றியாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சில விஷயங்கள் உடனே நடக்கும். இணையம் தொடர்பான முதலீடுகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். தொழில் மிக நேர்த்தியாக நடக்கும். உங்கள் வளர்ச்சி மற்றவர்களை பிரமிப்பு அடைய வைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நன்மைகள் தேடி வரும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் மனதிருப்தி உண்டாகும். இன்று உங்கள் பலம்: எந்தச் செயலிலும் துணிச்சலோடு இறங்குவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி உங்களுக்கு கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் உங்கள் திறமையை அங்கீகரிக்க மறுப்பார்கள். கையில் பணம் இருந்தால் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் வர்த்தகத்தில் கவனமாக ஈடுபட வேண்டும். 2 நெருங்கிய நண்பராக இருந்தாலும் சில விஷயங்களில் கவனம் தேவை. 3 ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 19 – புரட்டாசி – பராபவ வருடம் செவ்வாய் நாள் செவ்வாய் திதி ஏகாதசி (up to October 07, 12:35 am) துவாதசி (up to October 07, 11:17 pm) நட்சத்திரம் ஆயில்யம் (up to 10:17 pm) மகம் (up to October 07,9:40 pm) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 7:45 – 8:45 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 1:45 – 2:45 am / 7:30 – 8:30 pm இராகு காலம் மதியம் 3.00 – 4.30 எமகண்டம் காலை 9.00 – 10.30 குளிகை மதியம் 12.00 – 1.30 சூலம் வடக்கு பரிகாரம் பால் சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம் சூரியோதயம் 6:02 AM சூரிய அஸ்தமனம் 5:52 PM சந்திரோதயம் Oct 06 1:54 AM சந்திர அஸ்தமனம் Oct 06 2:53 PM



