உக்ரைன் தலைநகர் கீவ்வில் பள்ளி ஒன்றின் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் ரஷ்யா போர் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய நிலையில், 4 ஆண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நேற்று முன்தினம் இரவு ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது.
டிரோன் தாக்கியோது குழந்தைகளும், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு முகாம்களில் இருந்ததால் எந்த உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும், பள்ளி கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுடன், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் சுற்றியுள்ள பகுதிகளும் கடும் சேதமடைந்தன. சம்பவ இடத்துக்கு சென்ற அவசர கால மீட்பு படையினர் தீயை அணைத்தனர்.



