ஈரான் மீது பொருளாதாரத் தடை!.. டொனால்ட் டிரம்ப்!..

.

ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது போரை துவங்கியது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.

இதையடுத்து அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஈரான் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் இருந்தும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது.

இது பெரிய பிரச்சினையாக மாறியது. இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து ஈரானுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனாலும் ஹார்மூஸ் வழியாக வரும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்தது. தற்போது வரை இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில்தான் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். அதோடு, ஈரானுக்கு வர்த்தக ரீதியாக உதவும் அனைத்து நாடுகளுக்கும் கடுமையான பொருளாதார தடை விதிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார்.

 

40 டிரில்லியன் டாலரை தாண்டிய அமெரிக்க கடன்!….

உலகில் அமெரிக்கா பணக்கார நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல், அதிக வலிமை கொண்ட வல்லரசு நாடாக அமெரிக்கா இருக்கிறது. எந்த இரு நாடுகள் போரில் ஈடுபட்டாலும் அமெரிக்கா அதில் மத்தியஸ்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வரும். அதேபோல், பொருளாதார நெருக்கடிகளை சில நாடுகள் சந்திக்கும்போது அந்த நாடுகளுக்கு அமெரிக்கா உதவியும் செய்யும்.

அதேநேரம், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றவுடன் அமெரிக்காவின் கடன் அதிகரிக்க துவங்கியது. அமெரிக்காவின் கடன் வரலாறு காணாத வகையில் 40 ட்ரில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.3828 லட்சம் கோடி) டாலரை தாண்டிவிட்டது. கடந்த 2017ம் வருடம் டிரம்ப் முதல் முறையாக அதிபராக பதவியேற்றபோது 20 ட்ரில்லியன் டாலராக இருந்த கடன் இரு மடங்காக அதிகரித்துவிட்டது.

ராணுவ செலவுகள், முதியோர் நலத்திட்டங்கள், அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் உள்ளிட்டவை கடன் உயர முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.