தன்சானியா டங்கனிகா ஏரியில் படகு ஏரியில் கவிழ்ந்தது- 41 பேர் பலி

 

தன்சானியாவிலிருந்து கொங்கோ நோக்கி சென்றுகொண்டிருந்த படகு டங்கனிகா ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (24) பெரும் எண்ணிக்கையிலான சரக்குகளுடன் சுமார் 100 பேர் அந்தப் படகில் பயணித்தபோதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கிய மேலும் 49 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

படகுகளில் பெரும்பாலும் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்படுவதும், ஆபத்தான சந்தர்ப்பங்களில் பயணிகள் அணிவதற்கான உயிர்காக்கும் அங்கிகள் படகில் இல்லாமையுமே இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என குறிப்பிடப்படுகிறது.